ஒரே போடாய் போட்ட அமித்ஷா..!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 282 தொகுதிகளையும் கடந்து மாபெரும் வெற்றி பெரும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு அதாவது தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது காங்கிரஸா? அல்லது மீண்டும் பாஜகவா ?என பெரும் ஆவல் கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இம்மாதம் 19ஆம் தேதி தேர்தல் முடிகிறது. 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றது.

இந்நிலையில் ஒருசில தனியார் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் மூலம் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு தேர்தலைப் போல பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்குமா என்பதை விட சற்று குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 282 தொகுதியில் வெற்றி பெற்றது. இம்முறை இதனைத் தாண்டி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமித்ஷா. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் அதிக தொகுதியில் வெற்றி பெறுவது மட்டுமல்ல. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.