Asianet News TamilAsianet News Tamil

மேற்கு வங்க இடைத்தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும்.. மம்தாவை டரியல் ஆக்கிய திருணாமுல் காங் தலைவர்.

மேற்குவங்க இடைத்தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பது அக்காட்சியில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த அவர் இவ்வாறு கூறினார் 

BJP will win in West Bengal by-elections .. Thirunamul Cong leader  slip ofTung. Mamata shocking.
Author
Chennai, First Published Aug 7, 2021, 12:47 PM IST

மேற்குவங்க இடைத்தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பது அக்காட்சியில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த அவர் இவ்வாறு கூறினார் அப்போது அவரின் பேச்சை கேட்டு செய்தியாளர்கள் அதிர்ந்தனர். அவரின் இந்த பேச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர், முகுல் ராய் உண்மையை தான் பேசி இருக்கிறார் என கூறியுள்ளார். 

BJP will win in West Bengal by-elections .. Thirunamul Cong leader  slip ofTung. Mamata shocking.

சமீபத்தில் திருணாமுல்  காங்கிரசில் இணைந்த முகுல் ராய் செய்தியாளரை சந்தித்தார், அப்போது பேசிய அவர், மேற்கு வங்கத்தில் வரவிருக்கும்  இடைத்தேர்தலில் நிச்சயம் பாஜக வெற்றி பெறும், பாஜக மட்டும்தான் வெற்றி பெறும் என கூறினார், அவரின் பேச்சு பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது, உடனே தனது தவறை திருத்திக் கொண்ட அவர், மன்னிக்கவும் இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ்தான் வெற்றிபெறும், சந்தேகமின்றி மம்தாவின் தலைமையில் நாங்களே வெற்றி பெறுவோம். பாஜக படுதோல்வியை சந்திக்கும் . திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே இங்கு வெற்றியாளராக இருக்கும் என்றார். 

BJP will win in West Bengal by-elections .. Thirunamul Cong leader  slip ofTung. Mamata shocking.

அதேபோல் திரிபூராவில்  திருணாமுல் காங்கிரஸ் தனது வெற்றிக் கணக்கை தொடங்கும், பாஜக மேற்கு வங்கத்தில் ஒரே ஒரு இடத்தில் கூட இருக்காது. அது முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும். மம்தா பானர்ஜியே வங்காளத்தில் தொடர்ந்து ஆட்சி செய்வார் எனக் கூறினார். அதாவது முகுல் ராய் தொடக்கத்தில் திருணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் ஆவார். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மம்தா பானர்ஜி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். 2019ஆம் ஆண்டு வங்காளத்தில் பாஜகவின் வெற்றிக்கு அவர் தீவிரமாக பணியாற்றினார். மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கிருஷ்ணா நகர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டும் வென்றார். 

BJP will win in West Bengal by-elections .. Thirunamul Cong leader  slip ofTung. Mamata shocking.

இந்நிலையில் மீண்டும் திருணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க பாஜக செய்தி தொடர்பாளர்,ஷாமிக் பட்டாச்சாரியா,  முகுல் ராய் கிருஷ்ணா நகர் வடக்கு தொகுதி மக்களுக்கு துரோகம் செய்துள்ளார். அவர் முற்றிலும் மக்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். பாஜக வெற்றி பெறும் என்று அவர் உண்மையை தான் பேசியிருக்கிறார். என முகுல் ராயை பாஜக விமர்சித்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios