தமிழகத்தில் பாஜக 39 தொகுதிகளையும் கைப்பற்றும் - அண்ணாமலை உறுதி
பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டதன் மூலம் தமிழகத்தில் அறம் சார்ந்த அரசியல் மாற்றம் நிகழ உள்ளதாகவும், 39 பாராளுமன்ற தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் எனவும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணாநகரில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் விபி துரைசாமி, பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் நடைபெறுகையில் மழை பெய்த நிலையிலும் அண்ணாமலை உரையாற்றினார்.
அண்ணாமலை பேசுகையில், "2024ல் தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் நிகழவுள்ளது. இந்திய சரித்திரத்தில் மோடி தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சி தான் முக்கியமானது. ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திய கட்சி பாஜக. இந்தியா ஒரு ஊழல் நாடு என்ற பெயரை உடைத்து, கடுகளவு குற்றச்சாட்டு கூட இல்லாமல் மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழின் பெருமையை உலகெங்கும் உயர்த்தி சென்ற ஒரே பிரதமர் மோடி.
கன்னியாகுமரியில் தவறி விழுந்த பெண் மீது ஏறி இறங்கிய பேருந்து; மகன் கண் முன்னே பலியான தாய்
செங்கோல் வழி ஆட்சி இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ராஜாஜி ஏற்பாட்டில் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் நேரு அதை வாக்கிங் ஸ்டிக்காக மாற்றி அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைத்து விட்டார். தற்போது மீண்டும் அந்த செங்கோல் தமிழ் தேவாரம் ஒலிக்க செய்து பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட உடனேயே தமிழகத்தில் அறம் சார்ந்த ஆட்சி அமைய உள்ளது தெரிந்துவிட்டது.
திமுக ஆட்சிக்கும் அறத்துக்கும் சம்பந்தமில்லை. திமுகவில் முதல்வர் குடும்பத்தை யார் விமர்சித்தாலும் என்ன நடக்கும் என்று அமைச்சர் பி.டி.ஆர். மூலம் அறிவாலயம் உணர்த்தியிருக்கிறது. உதயநிதி பெயரில் உள்ள அறக்கட்டளையை அமைச்சர் அன்பில் நடத்திக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே முதலமைச்சர் துபாய் சென்றிருந்த போது, நோபல் பிரிக்ஸ் என்ற நிறுவனத்துடன் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தார்.
திருமணமான ஒரே மாதத்தில் காதல் மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்; பெண் வீட்டார் கதறல்
அது அவர்களின் குடும்ப பணத்தை துபாய் கொண்டு சென்று திரும்ப கொண்டு வருவதற்கான ஒப்பந்தம். உதயநிதியின் பெயரில் இயங்கும் அறக்கட்டளையும், நோபல் பிரிக்ஸ் நிறுவனத்தின் அலுவலகமும் ஒரே முகவரியில், ஒரே கட்டிடத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. இது தான் இந்த ஊழலுக்கான ஆதாரம். இதை விட வெட்கக்கேடான செயலில் ஒரு முதலமைச்சர் ஈடுபட்டிருக்க மாட்டார். முதலமைச்சர் ஜப்பானில் சொகுசாக இருக்கும் போது, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 22 குடும்பம் துக்கத்தில் தவிக்கிறது. தமிழகம் ஒரு கள்ளச்சாராய மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது.
2024 பாராளுமன்ற தேர்தலில் மதுரையில் வெற்றி உறுதி என்பதை இக்கூட்டம் காட்டியுள்ளது. மோடியின் ஆட்சி தமிழகத்திலும் நீடிக்கும். 39 எம்பி தொகுதிகளையும் கைப்பற்றுவோம்" என கூறினார்.