பாஜகவில் எந்த எதிர்பார்ப்புமின்றி இணைந்ததாகவும், பாஜகவை வளர்ப்பதே இனி என் பணியாக இருக்கும் என்றும் அண்மையில் பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பாஜகவில் இணைந்தார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி, நயினார் நாகேந்திரன் இணைந்தார்.

நயினார் நாகேந்திரன், பாஜகவில் இணைந்தது தமிழகத்தில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில், நாயினார் நாகேந்திரன், வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். 

பாஜகவில் இணைந்ததற்கு நிபந்தனைகள் எதுவும் விதித்தீர்களா என நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர் கேட்டதற்கு, எந்த எதிர்பார்ப்பும் இன்றி பாஜகவில் இணைந்துள்ளேன். அவர்களும் எந்த நிபந்தனைகளும் விதிக்கவில்லை. அவர்களும், எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதே இனி என் பணியாக இருக்கும் என்று கூறினார்.

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்காலம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்து தரப்பு மக்களுக்காகவும் செயல்படும் கட்சி என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள் என்றும். அதனால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையப்போவது உறுதி என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.