நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்தந்த மாநிலத்தில், தேர்தல் பரப்புரைகளை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில் கர்நாடகாவில் 22 தொகுதிகளில் வென்றால் அடுத்த 24 மணிநேரத்தில் பாஜக ஆட்சி அமையும் என எடியூரப்பா தெரிவித்து உள்ளார். வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் 22 தொகுதிகளிலும் பாஜகவுக்கு மக்கள் வெற்றியைத் தந்தால், அடுத்த 24 மணி நேரத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என எடியூரப்பா பேசி உள்ளார் 

புல்வாமா தாக்குதலுக்கு பின், இந்தியா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை மற்றும் பாலகோட் தாக்குதல், பயங்கர வாதிகள் முகாமை அழித்தது, இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வைத்தது என பல அதிரடி நடவடிக்கையால் மோடிக்கு மீண்டும் ஆதரவு பெருகி உள்ளது என எடியூரப்பா கோரி இருந்தார்.

மேலும், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மோடிக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகி உள்ளது என ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில், 22 தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெற  செய்தால் அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் பாஜக ஆட்சி அமையும் என  எடியூரப்பா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.