Asianet News TamilAsianet News Tamil

திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் மோதல் !! அமித்ஷா பங்கேற்ற ஊர்வலத்தில் வன்முறை !!

கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் திரிணாமூல் – பாஜக தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
 

BJP trinamool congress clash in  kolkatta
Author
Kolkata, First Published May 15, 2019, 7:47 AM IST

நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி ஆறுகட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடந்தன.

இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அம்மாநில பாஜகவினர் கொதிப்படைந்துள்ளனர்.

BJP trinamool congress clash in  kolkatta

இந்த பேரணி ரத்தான நிலையில் ஜாய்நகர் பகுதியில் நடைபெற்ற மற்றொரு பிரசார கூட்டத்தில் நேற்று மம்தா பானர்ஜியை அமித் ஷா கடுமையாக தாக்கி பேசினார். 

அப்போது இந்த மாநிலத்தில் உள்ள மக்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொன்னால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த மேடையில் இருந்து நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குகிறேன். நாளை வரை நான் கொல்கத்தாவில் இருப்பேன். முடிந்தால், துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று மம்தாவுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன்’ என அமித் ஷா பேசினார்.

BJP trinamool congress clash in  kolkatta
இதையடுத்து நேற்று மாலை கொல்கத்தாவில் நேற்று  மாலை நடைபெற்ற பாஜக பேரணியில் அமித் ஷா பங்கேற்றார்.  கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து சுமார் 7 மணியளவில் கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டன. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

BJP trinamool congress clash in  kolkatta

பேரணியில் வந்தவர்களுக்கும் வேறொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து அமித்ஷா ஊர்வலத்தில் இருந்து வெளியேறி சென்றுவிட்டார்.
சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றதால் கொல்கத்தா நகர மக்கள் பீதியடைந்துள்ளனர். பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios