விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளரை அறிவித்து தீவிரமாக பணியாற்றி வருகின்றன. நாளையுடன் வேட்மனு தாக்கல் நிறைவைடைய இருக்கிறது.

திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. அதே போல அதிமுக கூட்டணியில் இரண்டு தொகுதியிலும் அதிமுக போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தற்போது அங்கு பாஜக போட்டியிட போவதாக தகவல் வருகிறது. பாஜக மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் பெயரில் வேட்மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

காங்கிரஸிற்கு எதிராக பாஜக களமிறங்க இன்று மாலை வேட்மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிகிறது. எனினும் இது சம்பந்தமாக எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.