Asianet News TamilAsianet News Tamil

வேட்பாளரை மாற்றி பிரபல இளம்நடிகையை களமிறக்கும் பாஜக... திடீர் முடிவால் அதிர்ச்சி..!

மக்களவை தேர்தலில் பிரபல இளம் நடிகை பாஜக சாட்பில் வேட்பாளராக களமிறங்க உள்ளார். 
 

BJP to field a popular youth heroine
Author
Tamil Nadu, First Published Mar 23, 2019, 6:03 PM IST

மக்களவை தேர்தலில் பிரபல இளம் நடிகை பாஜக சாட்பில் வேட்பாளராக களமிறங்க உள்ளார். 

மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள பாஜக கர்நாடக மாநிலம் பெங்களுரு புறநகர் தொகுதிக்கான வேட்பாளராக பிரபல இளம் நடிகை நிஷா யோகேஸ்வர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

BJP to field a popular youth heroine

கர்நாடக முன்னாள் அமைச்சர் சன்னபட்னா சி.பி.யோகேஸ்வர் மகள் இந்த நிஷா. தற்போது 28 வயதாகும் நிஷா லண்டணல்லி லம்போதரா என்கிற கன்னடப்படத்தில் அறிமுகமாகி இதுவரை 8 படங்களில் நடித்துள்ளார். திருமணமாகாத நிஷா இப்போது பெங்களூரு புறநகர் தொகுதியில் மக்களவை வேட்பாளராக களமிறங்குகிறார். இவரது தந்தையை பெங்களூரு புறநகர் தொகுதியில் களமிறங்க பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. BJP to field a popular youth heroine

ஆனால், எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.கே.சுரேஷ் வலுவான வேட்பாளர் என்பதால் அவர் தனது மகளுக்கு சீட் கொடுத்தால் வெற்றி பெற்று விடலாம் எனக் கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட பாஜக தலைமை நிஷாவுக்கு சீட் கொடுத்துள்ளது. முன்னர் நடந்த தேர்தலில் தனது தந்தைக்காக நிஷா பிரச்சாரம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவரை பார்க்க கூட்டம் அதிகமாக திரண்டுள்ளது. இதனை மனதில் வைத்தே தனது மகளுக்கு சீட் வாங்கிக் கொடுத்துள்ளார் யோகேஸ்வர்.

BJP to field a popular youth heroine

நிஷா விரைவில் பிரச்சாரத்தை துவங்க உள்ளார். அப்போது அவரை காண ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால் தற்போதே போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய தயாராகி வருகிறது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios