Asianet News TamilAsianet News Tamil

சட்டமன்றத்தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு செம கவனிப்பு... அள்ளி வழங்கி பாஜக அதிரடி..!

வரும் சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ளார்.

BJP takes action against Tamil Nadu in view of Assembly elections
Author
Tamil Nadu, First Published Feb 1, 2021, 2:12 PM IST

வரும் சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு, மேற்குவங்காளம், கேரளா, அசாம், ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், இந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  வெளியிட்ட பட்ஜெட் உரையில்  தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை  வெளியிட்டு உள்ளார்.

BJP takes action against Tamil Nadu in view of Assembly elections

அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு திட்டங்களை நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பட்ஜெட் உரையின் போது  தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடி முதலீட்டில் 3500 கி.மீ தூர தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை அறிவித்தார். மதுரை-கொல்லம் சாலை மற்றும் சித்தூர்-தாட்சூர் சாலை ஆகியவை அடங்கும். அடுத்த ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என அறிவித்தார்.

சென்னையில் ரூ.63 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ 2வது கட்ட திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், பரதீப் மற்றும் பெட்டுகாட் ஆகிய 5 முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். மும்பை-கன்னியாகுமரி நடைபாதையின் 600 கி.மீ உள்பட ரூ .65,000 கோடி முதலீட்டில் கேரள மாநிலத்தில் 1100 கி.மீ தேசிய நெடுஞ்சாலை பணிகளை அறிவித்தார். மேற்கு வங்காள மாநிலத்தில் ரூ .25,000 கோடி செலவில் கொல்கத்தா-சிலிகுரி சாலை மேம்படுத்துதல் உட்பட 6700 கி.மீ நெடுஞ்சாலை பணிகளை அறிவித்தார்.

BJP takes action against Tamil Nadu in view of Assembly elections

அசாம் மாநிலத்தில் தற்போது ரூ .19000 கோடியில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருவதாக சீதாராமன் தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் அசாம் மாநிலத்தில் 1300 கி.மீ க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய ரூ .34,000 கோடி பணிகள்  மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். இந்த அறிவிப்புகள் அனைத்தும் வரும் சட்ட மன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே வெளியிடப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios