பயந்து கொண்டோ, மறைத்துக் கொண்டோல்லாம் பேட்டி தர முடியாது. ஓப்பனாதான் பேசுவேன். எங்க ரூட் இப்படித்தான் இருக்கும். வேணும்னா பேட்டியை சேனல்ல போடுங்க, இல்லேன்னா குப்பையில போடுங்க. எங்களுக்கு ஒரு வருத்தமும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருக்கிறது.

அரண்மனைகள் ஒரே இரவில் கட்டி முடிக்கப்படுபவை அல்லதான் ஆனால் அரண்மனைகளை ஒரே நாளில் இடித்து தள்ளிவிட முடியும்! ஒப்புக் கொள்கிறீர்கள்தானே?..... தமிழகத்தில் சில காலமாக கட்டப்பட்டு வந்த ஒரு மாய கோட்டையை ஜஸ்ட் லைக் தட் ஒரேயொரு வரியில் இடித்து தள்ளி, துவம்சம் செய்துவிட்டார் தமிழக பா.ஜ.க.வின் அண்ணாமலை. சமீபத்திய பிரஸ்மீட் ஒன்றில், ‘பயந்து கொண்டோ, மறைத்துக் கொண்டோல்லாம் பேட்டி தர முடியாது. ஓப்பனாதான் பேசுவேன். எங்க ரூட் இப்படித்தான் இருக்கும். வேணும்னா பேட்டியை சேனல்ல போடுங்க, இல்லேன்னா குப்பையில போடுங்க. எங்களுக்கு ஒரு வருத்தமும் இல்லை.’ என்று அவர் பேசிய பேச்சு மிக கடுமையான வைரலாகி இருக்கிறது. 
இது குறித்து தமிழக அரசியல் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் தரும் விரிவான பதில் இதோ….”இந்த தேசத்தில் கருத்துரிமை இல்லை, சகிப்புத்தன்மை இல்லை! என்று ஆளும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எவ்வளவோ முக்கியஸ்தர்கள் விமர்சனங்களை கொட்டியிருக்காங்க. அதில் உள்ள உண்மையையும் மறுப்பதற்கில்லை, அதேப்போல் ’நல்லவர்கள் போல்’ அப்படி விமர்சனம் செய்த நபர்கள் செய்த அக்கிரம அட்டூழியங்களை இந்த தேசம் அறியும். 

இதே நிலைதான் தமிழகத்திலும். அதாவது கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க. அரசை, அதிலும் குறிப்பாக ஜெயலலிதாவுக்கு பிறகான எடப்பாடியின் அரசை ‘பா.ஜ.க.வின் அடிமை அரசு’ என்று சொல்லி மிக மோசமாக வர்ணித்தன தமிழக எதிர்க்கட்சிகள். அக்கட்சியினர் மட்டுமில்லாது தமிழகத்தின் சில மீடியாக்களும், சோஷியல் மீடியா பயனாளர்களும் மிக கடுமையாக ரியாக்ட் செய்தனர் ஒவ்வொரு விஷயத்துக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை செய்த போதும், நோய்த்தொற்று காலத்தில் டாஸ்மாக் திறந்து வைக்கப்பட்ட போதும், லாக் – அப் மரணங்கள் நேர்ந்த போதும் மிக மிக கடுமையாக அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கொந்தளித்தனர் பலர். சில தினசரிகளும், சில மீடியாக்களும் செய்திகளில் அக்கினியை கொட்டினர். 
ஆனால், இப்போது தமிழகத்தை ஆள்வது தி.மு.க. அக்கட்சி ஆட்சிக்கு வந்து அரை வருடத்துக்கும் மேலாகிவிட்டது. மிக முழுமையாக நிர்வாகத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்தும், தனது இயக்க சித்தாந்தத்தை நிர்வாகத்தினுள் உள் செலுத்தியும் ஆகிவிட்டது அக்கட்சி. ஆனால் இப்போதும் நீட் தேர்வினால் தற்கொலைகள் நடக்கின்றன, நோய் தொற்று காலத்திலும் டாஸ்மாக் இயங்குகிறது, லாக் – அப் மரணங்கள் நடக்கின்றன, குடிபோதை பொதுஜனத்தை ரோட்டிலேயே அடித்து கொன்றார் ஒரு போலீஸ்! அதன் வீடியோ ஆதாரம் இணையத்தில் இருக்கிறது, சிறார் கிரிமினல்கள் போலீஸ்காரரை வெட்டிக் கொன்றனர் இப்படி இன்னும் இன்னும் எவ்வளவோ நடக்கின்றன. ஆனால் முந்தைய அரசை சாடியது போல் தற்போதைய அரசுக்கு எதிரான துள்ளல்கள் எங்கேயுமே இல்லை.

Scroll to load tweet…

இதை மக்கள் உணர்ந்திருந்தாலும் கூட அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். சில முக்கிய செய்தி சேனல்கள், தற்போதைய விவகாரங்கள் பலவற்றை மூடி மறைத்து, பூசி மெழுகுகின்றனர். ஆனால் அதேவேளையில் உ.பி.யிலும், குஜராத்திலும் நடப்பவற்றை ஏதோ தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் நடப்பது போல் சொல்லி கொதிக்கிறார்கள். இதுதான் நடுநிலைத்தன்மையா? அதேப்போல் சில கட்சிகளின் நிர்வாகிகள், தலைவர்களிடம் மட்டுமே சில விதமான சென்சிடீவ் கேள்விகளைக் கேட்டு, அவர்களை ஏதோ ஒரு பதில் சொல்ல வைத்து, அதை பூதாகரமாக்கி சிக்கலை உருவாக்கி விடுகின்றனர். ஆனால் ரூலிங்கில் இருப்பவர்களோ, அவர்களின் கூட்டணியை சேர்ந்தவர்களோ என்ன செய்தாலும், சொன்னாலும் அதை மிகப்பெரிய சமூக பிரச்னையாக்குவதில்லை. இதையெல்லாம் அடிப்படையாக வைத்துதான், தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை சமீபத்திய பிரஸ்மீட்டில் ஒரு முக்கிய சேனலின் பெயரை சொல்லி குறிப்பிட்டதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அவரோ ’நீங்கள் பெயரை குறிப்பிட்டு கேட்டால், நானும் சேனலின் பெயரை குறிப்பிடுதான் பதில் சொல்வேன். என்னால் வெளிப்படையாக பேசாமல் பதில் சொல்ல முடியாது.

Scroll to load tweet…

என்கிட்ட உண்மை இருக்குது, ஆதாரத்தோடுதான் பேசுறேன். நான் தப்புன்னா, அதை நிரூபியுங்க.’ என்று வெளிப்படையாகவும், சவாலாகவும் பேசியிருக்கிறார். தமிழகத்தின் சில செக்டார்களை மட்டும் மூடி மறைக்கும் சில மீடியாக்கள் கட்டியிருக்கும் கோட்டையை அண்ணாமலை உடைத்துவிட்டார்! என்பதே இதன் அர்த்தம்.” என்கிறார்கள். ஆனால் ‘இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் அதிகம் காக்கப்படும் மாநிலங்களில் முதலிடத்தில் நிற்பது தமிழகமே. காரணம் இது தி.மு.க.வின் ஆட்சி. யூ டியூபர் மாரிதாஸ், அடிப்படையற்ற மோசமான கருத்துக்களை தி.மு.க. ஆட்சி மீது வைத்தும் கூட அவரது விடுதலைக்கு எதிராக அப்பீலுக்கு போகவில்லை அரசு. அந்தப் பெருந்தன்மைதான் தி.மு.க. நிர்வாகத்தின் அழகு. எனவே அண்ணாமலை, புகழ்வாய்ந்த மீடியாவை பெயரைச்சொல்லி தாக்குவதன் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள முயல்கிறார். அது நிறைவேறாது. ஏனென்றால் இன்னமும் பா.ஜ.க. தொண்டர்கள் பலபேருக்கு அண்ணாமலையை யாரென்றே தெரியாது.” என்று நெத்தியடி பதில் வந்து விழுகிறது. 
ம்ம்ம்முடியல!....