தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் விமானம் கூட ஏற தெரியவில்லையென்றும் இதன் காரணமாக மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கான நிதியை கூட பெறமுடியவில்லையென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

திமுக- பாஜக மோதல்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக- பாஜக இடையே கடந்த சில மாதங்களாகவே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. திமுக ஆட்சி மீது தொடர் குற்றச்சாட்டுக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். முதலமைச்சர் துபாய் பயணம், மின் வாரியத்தில் முறைகேடு, தமிழக சாலைகளுக்கு கலைஞர் பெயர் சூட்டல், தமிழ் தாய் உருவப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் திமுக- பாஜக இடையே கடும் மோதல் ஏற்படுட்டுள்ளது. இதனை திமுகவிம் கடுமையாக எதிர்த்து விமர்சித்து வருகிறது. இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். 

திமுக ஒரு வெங்காயம்

சென்னையில் மயிலாப்பூரில் நடைபெற்ற திராவிட மாயை என்கிற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுகவை வீழ்த்துவது எளிதான காரியம் என கூறினார். திமுகவில் 260 நபர்கள் மேல்மட்டத்தில் உள்ளனர். அவர்களை வீழ்த்தி விட்டால் திமுகவை வீழ்த்துவது பெரிய காரியமில்லை. திமுகவும் பெரிய வெங்காயமும் ஒன்று அதனை உரிக்க உரிக்க அதில் ஒன்றும் இருக்காது. அது போலத்தால் திமுகவில் ஒன்றும் இல்லை என கூறினார். 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு மைல் கல்லாக இருக்கப் போகிறது எனவும், பாஜகவை நோக்கி மக்கள் வெள்ளம் போல் திரண்டு வருகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அதேசமயம் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்றும் அதனை யாராலும் தடுக்க முடியாது எனவும் கூறியுள்ளார். 

அமைச்சர்களுக்கு தமிழ் தெரியாது

தமிழக மக்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்துள்ளனர் எனவே தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது. திராவிட மாயை ஒழிப்பதற்கு தான் திராவிட மாடல் கட்சி செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பேசியவர் 90 சதவீத தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது , விமானம் ஏற கூட தெரியாது ஆங்கிலம் தெரியாததால் டெல்லி சென்று தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி கூட இவர்களால் பெற்று வர முடியாது என அண்ணாமலை விமர்சித்து பேசினார். அண்ணாமலையின் இந்த விமர்சனம் திமுக மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.