Asianet News TamilAsianet News Tamil

நாகர்கோவில் பாஜக மூத்த தலைவர் பேரன் அலப்பறை..?? செருப்பு போடாத MLA வுக்கு வந்த சோதனை..

தமிழகத்தில் எப்படியாவது கால்பதிக்க வேண்டுமென பாஜக பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. ஆனால் அதன் வியூகம் பெரிய அளவில் பலிக்கவில்லை. ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் 4 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று சட்டமன்றம் நுழைந்துள்ளனர். 

BJP senior leader's grandson's closet in Nagercoil .. ?? The test for the barefoot MLA ..
Author
Chennai, First Published Mar 15, 2022, 11:06 AM IST

" கிராண்ட் சன் ஆப் நாகர்கோயில் எம்எல்ஏ எம்.ஆர் காந்தி" என தனது இரு சக்கர வாகன நம்பர் பிளேட்டில் எழுதிவைத்து இளைஞர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. செருப்பு போட்டு நடந்தால் பூமாதேவிக்கு வலிக்கும் எனகூறி செருப்பு கூட போடாத நாகர்கோயில் எம்எல்ஏ எம்ஆர் காந்திக்கு வந்த சோதனையா இது என பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்.

எம்.ஆர் காந்தி: 

தமிழகத்தில் எப்படியாவது கால்பதிக்க வேண்டுமென பாஜக பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. ஆனால் அதன் வியூகம் பெரிய அளவில் பலிக்கவில்லை. ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் 4 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று சட்டமன்றம் நுழைந்துள்ளனர். அதில் ஒருவர்தான் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர் காந்தி 6 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, இதுவரை 5 முறை தோல்வியை கண்டு ஆறாவது முறையாக எம்எல்ஏ ஆனவர்தான் காந்தி. எப்போதும் காலில் செருப்பு கூட போடாமல் கதர் வேட்டி, பைஜாமா அணிந்து எளிமையாக இருந்து வருபவர்தான் எம்.ஆர் காந்தி. நாகர்கோயிலில் இன்று பாஜக வலுவாக வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு எம்.ஆர் காந்தியின் பங்கு மிக முக்கியமானது என்றே சொல்லலாம். 

இதையும் படியுங்கள்: எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை...! தொண்டர்களுக்கு சுடச்சுட காபி.. மதிய உணவு ரெடி..?

BJP senior leader's grandson's closet in Nagercoil .. ?? The test for the barefoot MLA ..

கிராண்ட் சன் ஆப் எம்.ஆர் காந்தி அலப்பறை: 

நாகர்கோவில் வாசிகள் பாஜகவுக்கு வாக்களித்தார்கள் என்பதை விட, எம்.ஆர் காந்திகாகதான் வாக்களித்தார்கள் என்றே கூறலாம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் அன்பாகவும் எளிமையாகவும் பழகக்கூடியவர் காந்தி. இதுவரை திருமணம் கூட செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் அவர். இந்நிலையில்தான் எம்ஆர் காந்தியின் பேரன் என கூறிக்கொண்டு இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. தனது இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட்டுக்கு பதிலாக " கிராண்ட் சன் ஆப் நாகர்கோயில் எம்எல்ஏ ஸ்ரீ எம்.ஆர் காந்தி " என  எழுதிவைத்து அந்த இரு சக்கர வாகனத்தில் அந்த இளைஞர் அமர்ந்துள்ளதைப் போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அம்ரிஷ் பாஜக என்ற ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து இந்த புகைப்படங்கள் பதிவேற்ற பட்டுள்ளன. இதேபோல் ரஜினியின் தர்பார் பட பாடலுடன் அந்த  இளைஞர் காரில் ஏறும் வீடியோவும் வைரலாகி வருகிறது, இரண்டு  போலீசாருடன் அவர் நடந்து வரும் போதும் கலைவாணர் அரங்கில் படிக்கட்டுகளில் அவர் இறங்கி வரும்போதும் பின்னணியில் தர்பார் பாடல் ஒலிக்கிறது, அதில் ஒரு நாள் அல்லது மற்றொரு நாள் எனது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் என அவர் பதிவிட்டுள்ளார்.

BJP senior leader's grandson's closet in Nagercoil .. ?? The test for the barefoot MLA ..

எம்.ஆர் காந்தி உதவியாளர் மகன்:

இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. எப்போதும் எளிமையாகவும் எந்த பந்தாவும் இல்லாமல் நடந்து கொள்ளும் காந்தியின் பேரனா இது என பலரும் அந்த இளைசரை கழுவி ஊற்றி வருகின்றனர். கட்சிக்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் காந்தியின் பேரன் என்று அலப்பறை செய்யும் இளைஞர் யார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிறகு அந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரிக்கையில் எம்.ஆர் காந்தியின் கார் ஓட்டுநராக நீண்டகாலம் பணியாற்றி வரும் கண்ணன் என்பவரின் மகன்தான் அந்த இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.

பல சட்டமன்ற தேர்தல்களில் தோல்வி முகத்தையே கண்ட எம்.ஆர் காந்திக்கு எப்போதும் உறுதுணையாக நின்றவர் கண்ணன் என்பதும், எப்போதும் கண்ணன் மீது எம்.ஆர் காந்திக்கு தனி பாசம் உண்டு என்றும், அதனால் எம்ஆர் காந்தியிடம் தங்களது சொந்த தாத்தாவைப் போலவே கண்ணனின் மகன்கள் பழகி வருவதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில்தான் " கிராண்ட் சன் ஆப் எம்.ஆர் காந்தி என அந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் எழுதி வைத்து அலப்பறை செய்து வருகிறார் என பாஜகவினர் கூறுகின்றனர்.  

இதையும் படியுங்கள்: Hijab Verdict: ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும்.. கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

BJP senior leader's grandson's closet in Nagercoil .. ?? The test for the barefoot MLA ..

கார் ஓட்டுநராக இருந்த கண்ணன் இப்போது உதவியாளராக உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்க எம்.ஆர் காந்தியை தொடர்பு கொண்டோம், ஆனால் அவருடன் பேச முடியவில்லை. இது தொடர்பாக சில ஊடகங்களுக்கு தகவல் விளக்கமளித்துள்ள அந்த இளைஞரின் தந்தை கண்ணன், எனது மகன் அப்படி எல்லாம் இல்லை, அதை யாரோ எடிட் செய்து போட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார். அதாவது நம்பர் பிளேட் க்கு பதிலாக இருசக்கர வாகனத்தில் கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோயில் எம்எல்ஏ காந்தி எழுதிய பைக் சாலையில் ஓட்டுவது விதிகளுக்கு புறம்பானது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அந்த பைக் சாலைக்கு வரும்பட்சத்தில் அது போலீசாருக்கே வெளிச்சம். 

Follow Us:
Download App:
  • android
  • ios