Asianet News TamilAsianet News Tamil

தேர்தலுக்காக பாஜக செய்த தில்லுமுல்லு... தாவிக்குதிக்கும் தம்பித்துரை..!

மக்களவை தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டே பாஜக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளதாக மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.,யுமான தம்பித்துரை தடாலடி கிளப்பியுள்ளார்.

BJP's fault for elections Thambithurai says
Author
Tamil Nadu, First Published Feb 3, 2019, 12:15 PM IST

மக்களவை தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டே பாஜக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளதாக மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.,யுமான தம்பித்துரை தடாலடி கிளப்பியுள்ளார்.

BJP's fault for elections Thambithurai says

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தம்பிதுரை மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில் திருவாரூர், குடவாசல் அருகே திருப்பாம்புரத்தில்  செய்தியாளர்களை சந்திந்த அவர், ’’மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் சில சிறப்பான அம்சங்கள் உள்ளன. ஆனால் பல வகைகளில் மக்களின் வாழ்க்கைக்கு எதிரான பட்ஜெட் இது. BJP's fault for elections Thambithurai says

ஒரு அரசு என்றால், தனது ஆட்சியில் 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் ஏற்கனவே 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. கடைசியாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யத் தேவையில்லை. நடைமுறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போதுதான் அனைத்து திட்டங்களையும் அறிவித்து தாக்கல் செய்ய வேண்டும்.

BJP's fault for elections Thambithurai says

ஆனால், சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த பா.ஜனதா, பல சலுகைகளை அறிவித்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிட்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இந்த இடைக்கால பட்ஜெட் பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை போல் உள்ளது. இதனால் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை’’ என அவர் கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios