Asianet News TamilAsianet News Tamil

மோடிய பார்த்து கைகாலெல்லாம் ச்சும்மா கிடுகிடுன்னு நடுங்குறார் ஸ்டாலின்.. பா.ஜ.க. ராகவனின் ரவுசு..!

ரஜினி கட்சி துவக்குவாரா இல்லையா?! என்பதற்க்கு கூட விடை தெரிந்துவிடும் போல, ஆனால் தமிழக பா.ஜ.க.வின் தலைவர் யார்? என்பதற்கு மட்டும் தெளிவே இல்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது.

BJP  Raghavan Rouse
Author
Tamil Nadu, First Published Jan 6, 2020, 6:21 PM IST

ரஜினி கட்சி துவக்குவாரா இல்லையா?! என்பதற்க்கு கூட விடை தெரிந்துவிடும் போல, ஆனால் தமிழக பா.ஜ.க.வின் தலைவர் யார்? என்பதற்கு மட்டும் தெளிவே இல்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. வானதி! என்றார்கள், இதோ ஏ.பி. முருகானந்தம்! பதவி ஏற்கப்போகிறார் என்றார்கள், பொன்னார் அல்லது சி.பி.ஆர்!இல் ஒருவர்ன்னு முடிவாகிடுச்சுப்பா என்றார்கள். ம்ஹூம், இப்ப ரெண்டு நாளாக ‘குப்புராம் குப்புராமு!’ என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆக தமிழக பா.ஜ.க.வின் தலைமை பதவி நாற்காலியை சுற்றி இப்படி ஒரு கூட்டமே மியூசிக்கல் சேர்! போல் ஓடிக் கொண்டிருக்கிறது. 

இந்த ரணகள சூழலிலும் அக்கட்சியால் தி.மு.க.வை வசை பாடாமல் இருக்க முடியவில்லை! என்பதுதான் ஹைலைட்டே. 
அக்கட்சியின் மாநிலச் செயலாளரான கே.டி.ராகவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தி.மு.க.வை துவைத்து தொங்கவிட்டிருக்கிறார். 

அதன் ஹைலைட் பாயிண்டுகள் இதோ....

* குடியுரிமை சட்டதிருத்த மசோதாவினால் இந்தியாவில் உள்ளவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இது ஸ்டாலினுக்கு தெரியுமா, தெரியாதா எனது தெரியவில்லை. தெரியும் என்றால், இப்போராட்டம் அர்த்தமற்றது. ஒருவேளை ‘தெரியாது’ என்றால், ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவருக்கு இது கூடத் தெரியவில்லை என்பது அவலம். 

* ஜார்கண்டில் பல ஆண்டு காலமாக எங்கள் ஆட்சி நடந்தது. இதனால் ஆட்சியை மாற்றிப் பார்த்தால் என்ன? என மக்கள் மத்தியில் ஒரு எண்ணம் வந்திருக்கலாம், அதனால் மாறி இருக்கலாம். இதை வைத்து எங்களுக்கு சறுக்கல்! என்று யாராவது சொன்னால் அது அரசியலறியா சிறுபிள்ளைப் பேச்சு. 

* 2021 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. பலம் வாய்ந்த கட்சியாக இருக்கும். தி.மு.க. பலம் வாய்ந்த கட்சி என நீங்கள் நினைத்தால், உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக கோர்ட்டுக்கு ஏன் ஓடினார்கள்? 

* நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் ராகுல் பிரதமராவார், எடப்பாடி ஆட்சி கவிழ்க்கப்படும், ஜூன் 3-ம் தேதியன்று கருணாநிதியின் பிறந்தநாளில் தான் முதல்வராவேன்! என்று சொல்லிக் கொண்டே இருந்தார் ஸ்டாலின். ஆனால் அது நடந்தததா? இருபத்து ரெண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அதை சாதிக்க முடியவில்லை, சமீபத்திய இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அதை சாதிக்க முடியவில்லை. தி.மு.க. ஒரு பெரிய கட்சி எனும் எண்ணம் ஸ்டாலினுக்கே இல்லை. இதுவே அவரது பெரும் பலவீனம். உண்மையில் அவர் வலுவான மோடியைக் கண்டு நடுங்குகிறார். அந்த நடுக்கத்தை மறைக்கத்தான் போராட்டம், ஆர்பாட்டம்! என்று ஸீன் செய்கிறார். 

* நாங்கள் வருமானவரித்துறையை தவறாகப் பயன்படுத்துவதாக  விமர்சிக்கிறார்கள். அப்படி பார்த்தால், எத்தனை தி.மு.க. பிரமுகர்களின் வீட்டில் இதுவரையில் ரெய்டு நடந்துவிட்டது? இதிலிருந்தே புரியலையா உண்மை!

*    குடியுரிமை விஷயத்தில் மட்டுமில்லை முத்தலாக் தடைச்சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றிலும் போராடினார்கள். அதற்காக அரசு பின்வாங்கிவிட்டதா என்ன? முடிந்தால் மோதிப்பார்க்கட்டும். எதிர்க்கட்சிகளைப் பார்த்து நாங்கள் பயப்படுவதில்லை. 

* ஜனவரி 15-ம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பா.ஜ.க.வின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டுவிடும். எனவே குறுகிய காலத்தில் தமிழக பா.ஜ.க.வுக்கு தலைவர் வந்துவிடுவார். ...........ஹும், அந்த கடைசி பாயிண்டு கூடிய சீக்கிரம் பலிச்சு, உருப்படியா ஒரு தலைவர் வந்து உட்கார்ந்து, தமிழகத்தில் அப்பவாச்சும் தாமரை மலருதா?!ன்னு பாப்பம்.

Follow Us:
Download App:
  • android
  • ios