*கடந்த 2019 அக்டோபர் 30 முதல் திருப்பூர் மாவட்டம் சிவன்மலை ஆண்டவர் கோயிலின் உத்தரவு பெட்டியில் ஐம்பொன் மகாலட்சுமி சிலை வைக்கப்பட்டுள்ளது. இத தாக்கம் இப்போது தெரிந்திருக்கிறது. அதாவது, தமிழக உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிகளவில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். ‘மகாலட்சுமி பெண்களின் அம்சம்! எனவே அவர்கள் ஆதிக்கம் பெறுவதை எழுபது நாட்களுக்கு முன்பே சிவன்மலை ஆண்டவர் குறிப்பால் உணர்த்தியுள்ளார்.’ என்று பக்தர்கள் சிலிர்க்கின்றனர். - பத்திரிக்கை செய்தி

*போராட்டத்தில் ஈடுபடும் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்களுக்கு, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஆதரவு தெரிவித்தார். இதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவிக்கிறது. தலிபான்கள் பாணியில் இந்த நாட்டை பா.ஜ.க. ஆளக்கூடாது. 
-சஞ்சய் ராவத் (சிவசேனாவின் முக்கிய தலைவர்)

*குடியுரிமை சட்ட திருத்த மசோதா விஷயத்தில் காங்கிரஸ் பொய் தகவல்களை கூறி வன்முறையை தூண்டிவிட்டது. வன்முறையில் ஈடுபட்டோரிடம் இழப்பீட்டு தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, தற்போது மன்னிப்பு கேட்டு வருகின்றனர் அவர்கள். காங்கிரஸை நம்பி போனதற்கு நன்கு அனுபவப்பட்டுவிட்டனர். 
-யோகி. ஆதித்யநாத் (உத்திரபிரதேச முதல்வர்)

*உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் நிறுவன மேலாளரிடம் பணத்தைப் பறித்து, கொலையும் செய்துள்ளனர். இந்த மாநிலத்தில், குற்றவாளிகள் பயமில்லாமல் மிகவும் சுதந்திரமாக திரிகின்றனர்.  பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, ஆண்களுக்கு என ஒட்டுமொத்த மக்களுக்குமே பாதுகாப்பில்லை. 
- பிரியங்கா காந்தி (காங்கிரஸ் பொதுசெயலாளர்)

*தன்னை சோஷியல் மீடியாவில் பின் தொடரும் வாஞ்சி செழியன் எனும் நபர், தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி, பாலியல் தொல்லை தருவதாக சோஷியல் மீடியாவிலேயே புகாரை பதிவு செய்துள்ள நடிகை நந்திதா ‘இவங்களுக்கெல்லாம் குடும்பமில்லையா! இந்த மாதிரி நபர்களை என்ன பண்ணலாம்?’ என்று கேட்டுள்ளார். 
-பத்திரிக்கை செய்தி

*தமிழகத்திற்கு அருகே உள்ள மாநிலங்கள் நல்ல  முன்னேற்றம் அடைந்து வருகின்றன. ஆனால் தமிழகம் வெறும் விருதுகளை மட்டுமே பெற்று, முன்னேறி விட்டதாக கூறுவதில் அர்த்தமில்லை. நாம் போக வேண்டிய மைல்களும், ஏற வேண்டிய சிகரங்களும் பெரிது. அதற்கு நல்ல தலைமை தேவை. மாற்றம் அவசியம். 
- கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம் தலைவர்)

*ஒரு மாவட்ட  பஞ்சாயத்து தலைவர் பதவி கூட காங்கிரசுக்கு தி.மு.க. வழங்கவில்லை என்பதற்காக ‘இது கூட்டணி தர்மமில்லை’ என பேட்டி அளித்திருந்தேன், அது உண்மைதான். அது நேற்றே முடிந்துவிட்டது. அது பற்றி இன்று பேசக்கூடாது. தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. எந்த மனக்கசப்பும் இல்லை. 
-கே.எஸ்.அழகிரி (மாநில தலைவர், தமிழக காங்கிரஸ்)

*அரசியலுக்குள் நான் காலெடுத்து வைத்த போது ‘உங்கள் மகனை அரசியலுக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள்!வாரிசை உருவாக்கி விட்டீர்கள்!’ என விமர்சனம் எழுந்தது. அதற்கு கருணாநிதி ‘ஸ்டாலினை எமர்ஜென்ஸி தான் அரசியலுக்கு அழைத்து வந்ததுவிட்டது. நான் அழைத்துவரவில்லை.’ என்றார். 

*இலங்கையில் வாழும் தமிழர்கள் பொருளாதாரத்தில் மேம்படவில்லை, தமிழர்கள் வாழும் பகுதிக்கு, இலங்கை அரசு சரி வர நிதியை வழங்குவதில்லை. புதிய அதிபர் கோத்தப்பயாவுக்கு தமிழர்கள் வாக்கு அளிக்காததால், அவர் தமிழர்களின் நலன் பற்றிக் கண்டு கொள்வதேயில்லை. -விக்னேஸ்வரன் (இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர்)

*பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் ‘டாஸ்மாக்’, மதுபான கடைகளில் மது விற்பனைக்கு அந்த நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, பல லட்சக்கணக்கான ஏழை தாய்மார்களின் கண்களில் இருந்து கண்ணீரை கொட்ட வைக்கிறது. -பிரசாத் (தமிழக பா.ஜ.க. ஊடகப் பிரிவு தலைவர்)

: விஷ்ணுப்ரியா