மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்களாத்தில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேற்கு வங்காளத்தை கோட்டையாக வைத்திருந்த சிபிஎம் ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை. மேற்கு வங்காளத்தில் பாஜக வளர்ந்துள்ளதால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தாவை வீழ்த்த பல வியூகங்களை வகுத்துவருகிறது.


அமித் ஷாவும் மேற்கு வங்காளத்தில் பாஜகவை அரியணையில் ஏற்ற பல உத்திகளை வகுத்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக மே.வங்காளத்தில் பாஜக ‘என் குடும்பம்; பாஜக குடும்பம்’ என்ற புதிய ஸ்லோகனையும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பாஜகவில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக இத்திட்டத்தை பாஜக அறிவித்துள்ளது. இதற்காக இலவசம மொபைல் எண்ணையும் உறுப்பினர்களுக்காக வழங்கியுள்ளது.
இதன் தொடக்க நிகழ்வில் காணொலி காட்சியில் பேசிய அக்கட்சி தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, ‘மம்தாவை ஆட்சியிலிருந்து விரட்ட பாஜகவில் அனைவரும் சேரவேண்டும். மேற்கு வங்க மக்களுக்காக மத்திய அரசு அனுப்பும் உணவு தானியங்களை மம்தா அரசு கொள்ளையடிக்கிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மம்தா அரசு தோல்வியடைந்துவிட்டது. அதனால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைவரும் பாஜகவில் இணைந்து உறுப்பினராக வேண்டும். என் குடும்பம்; பாஜக குடும்ப திட்டத்தை பெரிய வெற்றியாக்க வேண்டும்  
மேற்கு வங்காளத்தில் பாஜகவில் இதுவரை ஒரு கோடி பேர் இணைந்துள்ளதாக் அக்கட்சியின் மாநில தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.