மகாராஷ்டிரா முடிவுக்குப்பிறகு இருக்கு "திமுக"- வுக்கு ஆப்பு...! கொக்கரிக்கும் டெல்லி தலைகள்..!

இந்தியாவின் பொருளாதார தலைநகரம் மும்பையை தலைநகராகக்கொண்ட மகாராஷ்டிராவை ஆளப்போவது பாஜகதான் என அடித்து சொல்கிறது கருத்துக்கணிப்புகள்.

சிவசேனா உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தனிப்பெரும்பான்மையோடு பாஜக ஆட்சி அமைக்க போகிறது என்பதே பெரும்பாலான தேசிய ஊடகங்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. சும்மாவே காட்டு காட்டு என காட்டிக்கொண்டிருக்கும் மோடி-அமித்ஷா கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துவிட்டால் சும்மா இருப்பார்களா? மகாராஷ்டிராவை பொருத்தவரை காங்கிரஸ் பெரிய அளவில் டஃப் கொடுக்கவில்லை என்றாலும் தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவதாக கூறப்படுகிறது.

தேசியவாத கட்சியைப் பொருத்தவரை அக்கட்சியின் தலைவர் சரத்பவார், அவரது மகளும்  எம் பியுமான சுப்ரியா சுலேவும்  பாஜகவுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று கூறப்படுகிறது.

அதற்கு மாறாக முன்னாள் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் தான் டஃப் கொடுத்து வருகிறாராம். அவரையும்                ப. சிதம்பரம் மற்றும் டிகேசி முறையில் கவனிக்கவும் தயாராகி விட்டதாம் மத்தியில் ஆளும் கட்சி.

இதனால் என்சிபி-யை சேர்ந்தவர்களும் காங்கிரஸை சேர்ந்தவர்களும் மகாராஷ்டிராவில் ஆடித்தான் போயுள்ளார்களாம். இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டு விஷயத்திற்கு வருவோம். தற்போது பாஜக தலைமை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் கவனம் முழுவதும் மகாராஷ்டிரா மற்றும் அரியானா உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் தேர்தலில் வெற்றிக்கனியை பறிப்பதே ஆகும். அதனால்தான் இன்னும் தமிழகத்தின் மீதும் கேரளாவின் மீதும் கவனம் செலுத்தாமல் தமிழக தலைவரையும் அறிவிக்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார்களாம்

மகாராஷ்டிர மாநில தேர்தலில் கிட்டதட்ட வெற்றி உறுதி என்கிற நிலையில் தேர்தல் முடிவுகள் வந்தவுடன்.. அதாவது மறுநாளே தமிழகத்தில் கால் பதிக்கவும் சாம பேத தான தண்ட வேலைகளை கையில் எடுக்கவும் பிஜேபி முடிவு செய்துள்ளதாம். அதன் ஒரு கட்டமாக தான் இந்தியாவில் வேறு யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு பிஜேபியை கழுவி ஊற்றியும் "கோ- பேக் மோடி" என்பதற்கு பின்னணியில் இருப்பவர்களாக சந்தேகிக்கப்படும் திமுகவினரை ஒரு வழி செய்து விடுவது என்பது தான் அந்த திட்டமாகும்.

அதன்படி ஏற்கனவே எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் சர்ச்சைகளின் அடிப்படையில் சிதம்புரம் ட்ரீட்மெண்ட் உடனடியாக பாயுமாம். இந்த தகவல்கள் டெல்லியில் உள்ள அமைச்சக அதிகாரிகள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் மூலமாக திமுக தலைமைக்கு எட்டி உள்ளதாம் இதை கேள்விப்பட்ட பல திமுக முக்கிய பிரமுகர்கள் உள்ளுக்குள் ஆடிப்போய் கிடக்கிறார்களாம்