விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 21 என்று அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது.

திமுக கூட்டணியை பொறுத்தவரை நாங்குநேரியை காங்கிரஸுக்கே கொடுத்துவிட்டது, விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடவுள்ளது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை, வட மாவட்டங்களில் பாமக பலமான வாக்கு வங்கியை வைத்திருப்பதால் விக்கிரவாண்டி கெடுக்கிறது கேட்கிறது. ஆனால், சிவி சண்முகமோ, விடாப்பிடியாக கொடுக்க மறுத்துவிட்டார். அடுத்ததாக நாங்குநேரி தொகுதியை பாஜக குறிவைத்திருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணியில் ஓர் அங்கமாக இருக்கிறோம். இந்த இடைத் தேர்தலில் பிஜேபியின் நிலைப்பாட்டை பற்றி மத்திய தலைமையிடம் கேட்டிருக்கிறோம். அதன்படி முடிவெடுப்போம். எது எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணி வெற்றிபெற முழு உழைப்பையும் கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார். 

வேலூர் மக்களவைத் தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு கூட போகாமல் மௌனமாக இருந்துவிட்டு, அதிமுக கூட்டணி பற்றி பெரிதாகப் பேசாத பிஜேபி, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, நாங்களும் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்லி நாங்குநேரிக்கு கொக்கி போடுவது  நன்றாகவே தெரிகிறது. இதுவரைக்கும் சும்மாவே இருந்துவிட்டு இப்போ தேர்தல் அறிவித்ததும் நாங்குநேரியை கேட்பதால் என்ன சொல்வது என புரியாமல்  குமுறுகிறதாம் அதிமுக தலைமை.


தென் மாவட்டங்களில் பிஜேபி வளர்ச்சி பெற்றிருப்பதாக நினைக்கும் தமிழக பிஜேபி, அதிமுக கூட்டணியில் நாங்குநேரியில் நின்று மத்திய, மாநில ஆளுங்கட்சி பலத்துடன் வெற்றிபெற்றுவிடலாம் எனத் பிளான் போடுகிறது. என்னதான் வெளியே திமுக- காங்கிரஸ் தலைவர்கள் சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தாலும் நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு திமுக உள்ளடி வேலை பார்த்து கதையை முடித்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. அதுவே பிஜேபிக்கு சாதகமாக இருக்கும். நாங்குநேரி தொகுதியை பிஜேபி கேட்டால், தரமுடியாது என்று அதிமுகவால் சொல்ல முடியுமா என்ன? என்கிறது தமிழக பிஜேபி.

அப்படி நாங்குநேரி பிஜேபிக்கு கொடுக்கப்பட்டால் காங்கிரஸும் பிஜேபியும் தேர்தலில் நேரடிப் போட்டியிடும் தொகுதியாக மாறிவிடும்.

கடந்த தேர்தலில் நாங்குநேரி தொகுதியில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வசந்தகுமார் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் விஜயகுமாரைவிட 17,315 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.