இரட்டை இல்லை சின்னத்தை பெறுவதற்காக புரோக்கர் சுகேஷ் சந்திராவுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், தினகரனை தப்ப விடாமல் வலுவாக சிக்க வைப்பதற்காகவே, அவரது கைது தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 17 ம் தேதி கைது செய்யப்பட்ட புரோக்கர் சுகேஷிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில், தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 4 நாட்களாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் பல கேள்விகளுக்கு, மழுப்பலாக பதில் சொன்னாலும், தொலை பேசி உரையாடல், அவரது உதவியாளர் மற்றும் நண்பரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் கிடுக்கி பிடி போட்டு விசாரித்து வருகின்றனர்.

அதில், சுகேஷை கொச்சின் வரவழைத்து, அவரிடம் 10 கோடி ரூபாய், கணக்கில் வராத ஹவாலா பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதனால், சுகேஷிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1 கொடியே 30 லட்சம் போக எஞ்சிய பணத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், சுகேஷை தமக்கு யார் என்றே தெரியாது என்று தினகரன் கூறி வருவதால், தினகரனுக்கும் சுகேஷுக்கும் பல ஆண்டுகளாக இருந்த தொடர்புக்கான ஆதாரங்களையும் போலீசார் சேகரித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி நீதி மன்றத்தில் புரோக்கர் சுகேஷை ஆஜர்படுத்தி, போலீஸ் விசாரணைக்காக மீண்டும் எடுத்த பொது, தினகரன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு, பதில் அளித்த போலீசார், தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்ததுடன், சுகேஷ்-தினகரன் இடையேயான உரையாடல் பதிவையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், தினகரனுக்கு எதிராக, வலுவான ஆதாரங்களை  திரட்டி உள்ள டெல்லி போலீசார், அவர் வழக்கில் இருந்து தப்ப முடியாத அளவுக்கு, விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாகவே, தினகரன் கைது தள்ளி போவதாக டெல்லி போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.