Asianet News TamilAsianet News Tamil

வேட்பாளரை வாபஸ் பெற்ற பா.ஜ.க....மாண்டியாலா தொகுதியில் சுமலதா வெற்றி நிச்சயம்...

சில நாட்களுக்கு முன்பு சுமலதா, பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூருவில் சந்தித்து பேசினார். இந்நிலையில், சுமலதாவுக்கு ஆதரவாக இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

bjp not to contest in mandiya
Author
Karnataka, First Published Mar 24, 2019, 5:25 PM IST

நடிகை சுமலதாவை எதிர்த்து தனது கட்சி சார்பில் வேட்பாளர் யாரையும் நிறுத்தப்போவதில்லை என அறிவித்து காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது பாஜக. ஏற்கனவே காங்கிரஸ் அதிருப்தியாளர்களின் ஆதரவு மற்றும் திரையுலகினரின் பலத்த ஆதரவும் உள்ளதால் சுமலதா இங்கு வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.bjp not to contest in mandiya

மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பி தேர்தலில் டிக்கெட் கேட்டார். ஆனால் மாண்டியா தொகுதியை கூட்டணியான ஜே.டி. எஸ். கட்சிக்கு காங்கிரஸ் ஒதுக்கியது. அங்கு முதல்வர் குமாரசாமி மகன் நிகில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுமலதா சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அவருக்கு அம்பரீஷின் ரசிகர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு ஆதரவாக காங்கிரசாரே உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு சுமலதா, பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூருவில் சந்தித்து பேசினார். இந்நிலையில், சுமலதாவுக்கு ஆதரவாக இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவுக்கு பா.ஜனதா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. மாண்டியா தொகுதியை சுமலதாவுக்கு விட்டு கொடுத்துள்ளது.இதனால் சுமலதாவுக்கும், முதல்வர் குமாரசாமி மகன் நிகிலுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.bjp not to contest in mandiya

கர்நாடகாவில் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் பா.ஜனதா ஏற்கனவே 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மாண்டியா தொகுதியில் வேட்பாளரை நிறுத்த வில்லை. கோலார் தொகுதியில் எஸ்.முனிசாமியை வேட்பாளராக அறிவித்துள்ளது. இன்னும் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜனதா அறிவிக்க வேண்டியுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios