பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திற்கு நிச்சயம் துரோகம் செய்யாது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை எம்.பி. இல. கணேசன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்தனர்.
அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
பின்னர் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திற்கு நிச்சயம் துரோகம் செய்யாது என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்று தர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தமிழிசை தெரிவித்தார்.
