சென்னையில் நடந்த போராட்டத்தில் ஒருவர்  கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி திமுக எம்பி செந்தில் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா வலியுறுத்தியுள்ளார் .  சென்னையில்  நேற்று முன்தினம் இந்திய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள்  ஒன்றிணைந்து சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தினர் .  அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறைக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது . 

அப்போது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் ,  அப்போது போலீசார் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டதாக செய்திகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது  இந்த தகவல் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி ஆங்காங்கே போராட்டங்களும் சாலை மறியல்கள் நடந்தன .  இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள எச். ராஜா சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லீம் வன்முறையாளர்கள் துணை கமிஷனர் விஜயகுமாரி,   ஆய்வாளர் ராஜ்குமார் ,  பெண் காவலர்கள் ஆகியோரை தாக்கியுள்ளனர் . மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களை  சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே விசுவநாதன் மருத்துவமனையில் சென்று பார்வையிட்டார் .  

வன்முறையாளர்கள் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது .  ஆனால் அவர்கள் மீதான நடவடிக்கை.?  அதேபோல் சிஏஏ போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கையில் ஒருவர் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய காங்கிரஸ் எம்பிக்கள் , ஜோதிமணி,  திமுக எம்பி செந்திலையும்  உடனடியாக கைதுசெய்ய  வேண்டும் தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் முஸ்லீம் வன்முறையாளர்கள் காவல்துறையினரை தாக்கியுள்ளனர் .  இந்நிலையில் போராட்டக்காரர்களை தாக்கக் கூடாது துன்புறுத்தக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து தூண்டி விடுகிறார்.  ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கதக்க விதத்தில் அவமதித்தவரிடம் நேர்மை இருக்குமா.?  என  எச். ராஜா பதிவிட்டுள்ளார் .