நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.,கள் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதற்கு எதிராக பாஜக எம்பிக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். 

மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திமுக மற்றும்  கூட்டணியை சேர்ந்த எம்பிக்களும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 

அப்போது ‘வாழ்க தமிழ், வாழ்க கலைஞர், வாழ்க பெரியார். உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள். காந்தி, அம்பேத்கர், பெரியார், காமராஜ் வாழ்க. திராவிடம் வெல்க. தமிழ் வாழ்க... இந்தியாவும் வாழ்க. என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட அவர்கள் அனைவருமே வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என்ற வார்த்தைகளை மட்டும் உரக்க முழங்கினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக எம்.பிக்கள் பாரத் மாதாகி ஜே எனக் கூறி எதிர்ப்பை பதிவு செய்தனர். சில எம்பிக்கள் மு.க.ஸ்டாலினை ‘தளபதி வாழ்க’ எனக் கூறி பதவியேற்றுக் கொண்டனர். அப்போதும் பாஜக எம்பிகள் எதிர்ப்பு கோஷமிட்டனர். 

தமிழகத்தில் ஹிந்தியை கொண்டு வர மத்திய அரசு முயன்று வருவதாக கூறப்பட்ட நிலையில் ஹிந்திக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது திமுக. அதேபோல் கடவுள் மறுப்பு கொள்கையை கொண்ட பெரியார் பெயரையும் நாடாளுமன்றத்தில் உரக்க முழக்கமிட்டனர். பாஜக எம்.பிகள் எதிர்ப்பு கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.