பாஜக மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டதாக கூறி தனது கூற்றை ஆதரிக்க ஒரு ஆவணத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.சு.சாமி இந்த வழக்கை கையில் எடுத்திருப்பது பாலிவுட் நடிகர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்திருக்கிறது. நடிகர் சுஷாந்த் காதலி மீது தற்போது அனைத்து சந்தேகங்களும் உலா வருகின்றது. இந்தநிலையில்15 கோடி ரூபாய் சுஷாந்த் வங்கி கணக்கில் இருந்து வேறு ஒருவரது வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. விசாரணை இப்படி போய்கொண்டிருக்க சு.சாமி இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பது பாலிவுட்டில்  பிரளத்தை ஏற்படுத்தும் என அனைவரும் அச்சமடைந்திருக்கிறார்கள். 


“சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டதாக நான் ஏன் நினைக்கிறேன்” என்று சுவாமி 26 புள்ளிகளைக் கொண்ட ஆவணத்தின் புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார் சுப்பிரமணிய சாமி. அந்த ஆவணத்தின் படி, சுஷாந்தின் கழுத்தில் இருந்த குறி தற்கொலை என்பதைக் குறிக்கவில்லை, மாறாக படுகொலை எனக் குறித்து சுட்டிக்காட்டியது.

 

தூக்குப்போட்டு தற்கொலை செய்ய, ஒருவர் தனது காலடியில் உள்ள மேசையை அகற்றி தூக்கிலிட வேண்டும் என்றும்
அவரது உடலில் உள்ள குறியீடுகள் அடிப்பதை குறிப்பதாகவும் மேலும் சுப்பிரமணியன் சுவாமி பீகார் முதல்வர் நிதீஷ்குமாரிடம் பேசி ஒரு நாள் கழித்து இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.இதற்கிடையே  உச்சநீதிமன்றத்தில் சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, "காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருவதால் சிபிஐ விசாரணை அவசியமில்லை என மனுவை தள்ளுபடி செய்துள்ளது".


ஜூன் 14 அன்று மும்பையின் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் சுஷாந்த் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் நடிகர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசார், பாலிவுட் நட்சத்திரங்கள் பலரிடமும் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.