காங்கிரஸ் எம்எல்ஏக்களை போல் சட்டப்பேரவைக்கு கருப்பு உடையில் வந்த வானதி சீனிவாசன்.! என்ன காரணம் தெரியுமா.?

ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து  தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கருப்பு உடையில் வந்த நிலையில், பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசனும் கருப்பு உடையில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

BJP MLA Vanathi Srinivasan wearing a black saree to the Tamil Nadu Legislative Assembly caused a stir

ராகுல் காந்தி பதவி பறிப்பு

தேர்தல் பிரச்சாரத்தில் போது மோடியை கொள்ளைக்காரர் என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ராகுல்காந்தியை எம்பி பதவியில் இருந்து நீக்கி நாடாளுமன்ற செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு கருப்பு உடை அணிந்து சென்று தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கருப்பு உடை அணிந்து சென்றிருந்தனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஊழல்.. பகீர் கிளப்பிய எடப்பாடி.! உண்மையா.? பிடிஆர் சொன்ன விளக்கம்

BJP MLA Vanathi Srinivasan wearing a black saree to the Tamil Nadu Legislative Assembly caused a stir

கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு

இந்தநிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் கருப்பு உடை அணிந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது பல்வேறு கேள்விகளை வானதி சீனிவாசன்  எழுப்பினார்.

 

முன்னதாக வானதியை பேச அழைத்த சபாநாயகர் அப்பாவு, "காங்கிரஸ்காரர்கள் தான் யூனிஃபார்மில் வந்திருக்கிறார்கள். நீங்களும் அதே யூனிஃபார்மில் இருப்பதாக தெரிகிறது? என்றார். இதற்கு பதிலளித்தபடியே தனது கருப்பு உடைக்கு விளக்கத்தை அளித்து பேசினார். எமர்ஜென்சியின் போது எப்படி எல்லாம் ஆளுங்கட்சி தலைவர்கள் சிரமப்பட்டார்கள் என்பதை நினைவூட்டுவதற்காக நான் கருப்பு உடையில் வந்திருக்கிறேன் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை.. எல்லாமே போச்சு.!! எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து செய்த தரமான சம்பவம்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios