Asianet News TamilAsianet News Tamil

2030-ல் இந்தியா... இப்போதே குறி வைத்த பாஜக..!

பாஜகவின் 48 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். 

bjp manifesto 2019 released
Author
India, First Published Apr 8, 2019, 12:58 PM IST

பாஜகவின் 48 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். bjp manifesto 2019 released

அந்த அறிக்கையில் ராமர் கோவில் கட்டப்படும். விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்படும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக தேர்தல் அறிக்கை தொலைநோக்கு பார்வை கொண்டது, நடைமுறைக்கு சாத்தியமானது. வேளாண்மை, ஊரக வளர்ச்சி சார்ந்து 25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படும்.bjp manifesto 2019 released

உள்கட்டமைப்புத்துறையில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு உறுதி. தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு எதிராக, துளிகூட சமரசம் இல்லை என்ற கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும். ராணுவத்திற்கு தேவையான அதிநவீன கருவிகள், தளவாடங்கள் வாங்குவது விரைவுபடுத்தப்படும். ராணுவத்திற்கு தேவையான அதிநவீன கருவிகள், தளவாடங்கள் வாங்குவது விரைவுபடுத்தப்படும்.

பாதுகாப்புத் துறைக்கான கொள்முதலில் சுயசார்பு உறுதிப்படுத்தப்படும். மத்திய ஆயுத போலீஸ் படைகள் மேலும் நவீனப்படுத்தப்பட்டு, திறன் அதிகரிக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோத குடிபெயர்வுகளை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். 
எல்லைகளில் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும். எல்லையோரப் பகுதிகளில் வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

2024ஆம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்புத்துறையில் ரூ.100 லட்சம் கோடி மூலதன முதலீடுகள் செய்யப்படும். விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா விவசாய கடன் (வட்டியில்லா கிசான் கிரடிட் கார்டு கடன்) வழங்கப்படும். வசாயத்துறையில் உற்பத்தியை மேம்படுத்த, வேளாண் - ஊரக துறையில் 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். 
சிறு வணிகர்களுக்காக தேசிய வர்த்தகர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.bjp manifesto 2019 released

சில்லறை வர்த்தகத்திற்கான தேசிய கொள்கை வகுக்கப்படும். 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்ற உறுதி. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட அனைத்து வழிவகைகளும் ஆராய்ந்து விரைவுபடுத்தப்படும் என்பன உள்ளிட்ட 75 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Follow Us:
Download App:
  • android
  • ios