* பண மதிப்பிழப்பு செய்யபட்டபோது பாதிக்கப்பட்ட மக்கள் இந்த தேர்தலில் சரியான பதில் அளிக்க வேண்டும்:    மம்தா பானர்ஜி (யக்கோவ், பண மதிப்பிழப்பை சட்டப்பூர்வமா செஞ்சு, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தவங்க மேலே மக்களை பாய சொல்லுற நீங்க, சாரதா சிட் பண்டு மோசடிக்கு விவகாரத்துக்கு ஒத்து ஊதுற உங்களை என்ன பண்ண சொல்லி மக்களிடம் கேட்பீங்கன்னு பி.ஜே.பி. நறுக்குன்னு கேக்குதே.)

* தமிழகத்தில் தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் ஓரளவு திருப்தி அளித்தன. மேலும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை: பொன்ராதாகிருஷ்ணன். (லிவ்விங் காமராஜேரே இப்படி வெறுத்துப் போயி பேசினாக்கா, கடல்ல தாமரையை மலர வைக்க படாத பாடு படுற தமிழிசையக்காவோட நிலைமையை கொஞ்சம் நெனச்சு பாருங்க சாமி)

* பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தக்க பதிலடியை இந்தியா கொடுக்க வேண்டுமென்றால் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமாராக்கிட வேண்டும் இந்திய மக்கள்: அமித்ஷா. (க்கும், மொரட்டு மெஜாரிட்டியில 2014ல் ஆட்சிக்கு வந்து உட்கார்ந்த உங்களோட கடைசி வருட ஆட்சியில, புல்வாமாவுல சதிராட்டம் ஆடிட்டு போயிட்டானுங்க. ஆனா இப்ப அலையுமில்லை, இலையுமில்ல. என்னத்த நீங்க வந்து, பாகிஸ்தான செஞ்சு....அட போங்க அமித்ஷா ஜி.)

* லோக்சபா தேர்தலின் போது ம.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக ஸ்டாலினுக்கு நன்றி. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: வைகோ. (அண்ணே, நட்பு இருக்க வேண்டிதான், பணிவும் இருக்க வேண்டிதான். ஆனா அதுக்காக இப்படி இருக்கப்டாதுண்ணே. ஹெலிகாப்டரை பார்த்து அவிய்ங்க கும்பிட்டதை விட மோசமான நிலையில இருக்குது உங்க பேச்சு. கொடுத்த ஒரு தொகுதிக்கு பிரசாரம் பண்ணினதுக்குமா நன்றி சொல்லி சூளுரை? ம்ம்மிடியலண்ணே

* தலித்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டதற்கு காரணமான அ.தி.மு.க. - பா.ம.க.வினரை கைது செய்யாமல் இருப்பது கண்டனத்துகு உரியது. இதை மிக வன்மையாக நான் கண்டிக்கிறேன்.: காங் தலைவர் அழகிரி. (சிதம்பரம் கையில் இருக்கும் இந்த கிளிக்கு பேச மட்டுமில்லை, பாடவும் வருமுன்னு நிரூபிச்சீங்க பாருங்க, அங்கே நிக்குறீங்க தலைவரே. எங்கே அப்படியே திருநாவுக்கரசரை பத்தி உங்க திருவாய் மலர்ந்து ஒரு கமெண்ட்டை எடுத்து விடுங்க பாப்போம்)