மதுரையில் விசிகவினர் பாஜகவினரை அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பாஜக பிரமுகர்களை,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமாவளவன் மீது அவதூறாக பேசி வரும் பாஜகவினரை கைதுசெய்ய வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் எல்லாளன் பாண்டியம்மாள் உட்பட ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பாஜகவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு வந்த பாஜக பிரமுகரின் காரை மறித்த, அவர்கள் அந்த நபரை கடுமையாக தாக்கி விரட்டி அடித்தனர். இதனால் போலீசாருக்கும், விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் உள்பட 100-க்கு மேற்பட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்.