கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்து கோவில்களில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடை வைத்து வியாபாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வலதுசாரி அமைப்பு கோரிக்கை விடுத்தனர். இதற்கு பாஜக மூத்த தலைவரும் கர்நாடக சட்டமன்ற மேலவை உறுப்பினருமான விஸ்வநாத் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்து கோவில்களில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடை வைத்து வியாபாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வலதுசாரி அமைப்பு கோரிக்கை விடுத்தனர். இதற்கு பாஜக மூத்த தலைவரும் கர்நாடக சட்டமன்ற மேலவை உறுப்பினருமான விஸ்வநாத் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இந்து - முஸ்லீம் பாகுபாடு..?:
மேலும் தற்போதைய கர்நாடக அரசு மத அரசியலில் ஈடுப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு எல்லாம் கூட அவர்கள் பல்வேறு தொழிலும் வியாபாரத்திலும் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்து - முஸ்லீம் எனும் பாகுபாடு இதில் பாரக்ககூடாது; இது வெறும் வயிற்றிற்கான கேள்வி என்று கூறும் அவர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சிறு தொழில் ஈடுப்பட்டு வருபவர்களை தடை விதிக்கும் நடவடிக்கை அறமற்றது என்றும் கண்டித்துள்ளார்.மாநிலத்தில் இரு மதத்தினருக்கும் இடையே நடக்கும் மோதலை அரசு தடுக்காமல், அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் மத மோதல் குறித்தான தனது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் கர்நாடகத்தில் நிலவும் இந்த பிரச்சனையில் அரசு ஒரு நிலையான முடிவை எடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஹிஜாப் தடை:
மேலும் பேசிய அவர், கர்நாடகத்தில் நடந்துக்கொண்டிருப்பது பாஜகவின் ஆட்சியே தவிர ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம் உள்ளிட்ட பிரிவுகளின் ஆட்சி அல்ல என்று சாடியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் ஆளும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை வீழ்த்தி பாஜக ஆட்சியை கொண்டு வந்ததில் முக்கிய தலைவர்களில் ஒருவர் விஸ்வநாத். மேலும் இவர் அப்போது பிஎஸ் எடியூரப்பா தலைமையிலான பாஜகவை ஆட்சி அமைக்க உரிமை கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக ஹிஜாப் தடை விதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஹிஜாப் தொடர்பான் வழக்கில் கர்நாடக நீதிமன்றம், ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கேரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஹிஜாப் அணிவது இஸ்லாம்மின் இன்றியமையாத அங்கம் அல்ல என்பதையும் குறிப்பிட்டது.
கர்நாடக புது சர்ச்சை:
கர்நாடகத்தில் உள்ள உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய கடலோர மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோவில்கள் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த திருவிழாக்கள் இந்த முறை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் உள்ள மகாலிங்கேஸ்வரா கோவிலில் ஏப்ரல் 20ல் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின்போது ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வர். இந்நிலையில் கடை அமைப்பதற்கான ஏலம் மார்ச் 31ல் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் முஸ்லிம் வியாபாரிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் கடை போட தடை:
அதேபோல் கடந்த 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் உடுப்பியின் காவுப்பில் உள்ள மாரி குடி கோவில் நடைபெற்ற சுக்கி மாரி பூஜை திருவிழாவில் இஸ்லாமியர்களுக்கு கடைகள் அமைக்க எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக, உடுப்பியில் வலதுசாரி அமைப்புகளால், இந்து அல்லாத வர்த்தகர்களை கோவில் வளாகங்களில் இருந்து தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஹிஜாப் மீதான மாநில அரசின் தடையை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம்களின் ஒரு பிரிவினர் பந்த் அழைப்பு விடுத்துள்ளதாக அந்த அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.மாநிலம் முழுவதும் இந்து கோவில் திருவிழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் இந்து அல்லாத வியாபாரிகளையும் தடை செய்ய வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில் அதிகாரிகளிடம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: திருவிழாக்களில் கடை போட 'முஸ்லிம்களுக்கு' தடை..கர்நாடகாவில் புது 'சர்ச்சை' !
