Asianet News TamilAsianet News Tamil

சலவை தொழிலாளர், முடிதிருத்துவோருக்கு மாதம் ரூ5ஆயிரம் வழங்க பாஜக தலைவர் முருகன் கோரிக்கை.!!

முடிதிருத்துவோருக்கும் சலவைத் தொழிலாளர்களுக்கும் மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இதுவரை இந்த இரண்டு பிரிவினருக்கும் தமிழக அரசு எந்த நிவாரணமும் அறிவிக்கவில்லை. ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில் சலூன் கடைகள் திறக்க தடை நீடிக்கிறது. இவர்கள் வருமானம் இன்றி ரெம்பவே சிரமப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கென்று குரல் கொடுப்பதற்கு வலுவான தலைவர்கள் இல்லாதபோது பாஜக தலைவர் முருகன் குரல் கொடுத்திருப்பது இந்த மக்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.

BJP leader Murugan demands Laundry workers get Rs. 5,000 per month
Author
Tamil Nadu, First Published May 6, 2020, 8:10 PM IST

T.Balamurukan

முடிதிருத்துவோருக்கும் சலவைத் தொழிலாளர்களுக்கும் மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இதுவரை இந்த இரண்டு பிரிவினருக்கும் தமிழக அரசு எந்த நிவாரணமும் அறிவிக்கவில்லை. ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில் சலூன் கடைகள் திறக்க தடை நீடிக்கிறது. இவர்கள் வருமானம் இன்றி ரெம்பவே சிரமப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கென்று குரல் கொடுப்பதற்கு வலுவான தலைவர்கள் இல்லாதபோது பாஜக தலைவர் முருகன் குரல் கொடுத்திருப்பது இந்த மக்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.

BJP leader Murugan demands Laundry workers get Rs. 5,000 per month

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்..

"மே மாதம் 4-ம்தேதி முதல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. பல்வேறு வகைப்பட்ட அத்தியாவசிய பணிகளும், அனைத்து வகையான தொழில்களும், கடைகளும் திறக்க அனுமதி அளித்தும் கூட, சலூன்கள் திறக்க நோய் தொற்று காரணமாக அனுமதி இல்லை.

BJP leader Murugan demands Laundry workers get Rs. 5,000 per month

முடி திருத்தங்களுக்கு ஏன் அனுமதி இல்லை என்பதை அனைவருமே புரிந்து கொள்வர். கர்நாடக பாஜக அரசு சுமார் 60 ஆயிரம் சலவைத் தொழிலாளர்களுக்கும், 2,30,000 முடி திருத்துபவர்களுக்கும் மாதம் ரூபாய் 5 ஆயிரம் நிவாரண தொகை அறிவித்துள்ளது.
எனவே ஊரடங்கில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து முடி திருத்தும் தொழிலாளிக்கும், சலவை தொழிலாளிக்கும் குடும்ப நிவாரண உதவியாக மாதம் ரூபாய் 5000 (மீனவர்களுக்கு வழங்குவது போலவே) வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.அவர்களது பணி துவங்க தமிழக அரசு அனுமதிக்கும் வரை இந்த நிவாரண உதவி தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios