கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் பசுமை வழிச் சாலைக்காக மரங்கள் வெட்டப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மரம் வெட்டுவதைப் பற்றி இவர்கள் பேசலாமா என்று தமிழிசை எதிர்க் கேள்வி எழுப்பினார். இதற்கு எதிராகக் கொந்தளித்த பாமகவினர் நேற்று பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் உருவானது. மேலும் தமிழிசை அன்புமணி இடையே டிவிட்டரில் கடும் கருத்து மோதல் ஏற்பட்டது.

108 சமுதாயங்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த ராமதாஸின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் அதற்காக ராமதாஸிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிக்கை வெளியிட்ட அவர், "தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாய மக்களின் சமூகநீதிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திவிட்டு, அதற்காக மன்னிப்புக் கேட்காத தமிழிசை தமது செயலை நியாயப்படுத்தி வருகிறார். மானமுள்ள தீரத்திற்கு பெயர்போன மக்கள் இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்; மன்னிக்க மாட்டார்கள்" என்று குறிப்பிட்டுள்ள ஜி.கே.மணி, சமூக நீதிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவர் அய்யாவிடமும், வன்னிய சமுதாய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையிலுள்ள பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகம் முன் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தமிழிசை மன்னிப்புக் கோர வலியுறுத்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் நாளை மறுநாள் வியாழக்கிழமை பா.ம.க. சார்பில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும்" என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மரம்வெட்டி என்ற பதத்தை உபயோகித்ததற்க்காக டாக்டர் தமிழிசை வன்னிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்பதே சரியான தலைமை பண்பாக இருக்க முடியும் என தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.