மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரியை திறக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். முந்தைய தி.மு.க., ஆட்சியில், விதிகளை மீறி மதுரையில் செயல்பட்ட கிரானைட் குவாரிகளால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால், 2012 முதல் அந்த குவாரிகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்தது.

 

குவாரி முறைகேடு குறித்து விசாரித்த சகாயம், ஐ.ஏ.எஸ்., குழுவும், 2015ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. இதனால், வழக்கில் சிக்காத, கிரானைட் குவாரிகளை செயல்பட அனுமதிக்க வேண்டும் என தி.மு.க., கோரிக்கை விடுத்தது. இப்போது பா.ஜ.க,வும் அந்த கோரிக்கையை முன்னெடுத்து வருகிறது. தேர்தல் வரும் நேரத்தில், இது தொடர்பாக போராட்டம் நடத்தினால் கிரானைட் குவாரி செயல்படாததால் வேலையிழந்த, 40 ஆயிரம் தொழிலாளர்களின் ஓட்டுகளை பெறலாம் என கணக்கு போடுகிறார்கள்.