Asianet News TamilAsianet News Tamil

அண்ணாமலையை அலறவிடும் அதிமுக.. நிர்மல் குமாரை தொடர்ந்து முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய இபிஎஸ்..!

பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் #420 மலை என்று கடுமையாக விமர்சித்து அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

bjp it wing secretary dilip kannan join aiadmk
Author
First Published Mar 7, 2023, 11:55 AM IST

தமிழக பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி உட்பட பலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் #420 மலை என்று கடுமையாக விமர்சித்து அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மறுநாளே தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? 

இதையும் படிங்க;- KT.ராகவனை திட்டமிட்டு காலி செய்த அண்ணாமலை! வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி கிழித்து தொங்கவிட்ட திலீப் கண்ணன்

bjp it wing secretary dilip kannan join aiadmk

மேலும், நைனார் நாகேந்திரனை இவர்கள் இதுவரை ஒரு மனிதனாக கூட மதித்தது இல்லை. மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை தனது அறையில் உள்ளே வைத்துக்கொண்டு அசிங்கமான வார்த்தைகளால் போலீஸ் தோரணையில் ஏளானமாக பேசுவதாகவும் திலிப் கண்ணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அதிமுக கூட்டணி கட்சியாக இருந்துக் கொண்டு இதை செய்திருக்க கூடாது என்று கூறி எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி கடுமையாக விமர்சித்திருந்தார். 

இதையும் படிங்க;-  கொங்கு மண்டலம் உங்க கோட்டைனு சொன்னீங்க என்ன ஆச்சு! தலைமை பொறுப்புக்கு தகுதியானவரா இபிஎஸ்? அதிமுகவை சீண்டிய BJP

bjp it wing secretary dilip kannan join aiadmk

இந்நிலையில், அதிமுக இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தமிழக பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகிய திலிப் கண்ணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி அதிமுகவில் இணைந்து வருவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios