bjp is threatening admk says thirunavukkarasar
தமிழகத்தில் உள்ள அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகளை தனது சுய லாபத்துக்காக பாஜக தொடர்ந்து மிரட்டி வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது பாஜக ஆட்டுவிக்கும் பொம்மலாட்ட ஆட்சி நடப்பதாக கூறினார்.

பாஜக அழைப்பின் பேரிலேயே ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் மாறி, மாறி பிரதமரை சந்தித்து வருகிறார்கள் என்றும் இதில் உள்நோக்கம் உள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வர உள்ள நிலையில், அதிமுகவிள் இரு அணிகளின் வாக்குகளைப் பெறவே பாஜக அவர்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் திருநாவுக்காசர் தெரிவித்தார்.
