அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டதற்கு பாஜக. தான் காரணம் என்று மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் முதலமைச்சராக பன்னீர்செல்வமும் பொறுப்பேற்றனர்.

ஆனால் பன்னீரின் இடத்தை பிடிக்க சசிகலா முயற்சி மேற்கொண்டதால் பன்னீர் அணியில் இருந்து பிரிந்தார்.

மேலும் சசிகலாவுக்கு எதிராக போர்கொடி தூக்கினார். இதைதொடர்ந்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும் துணைபொதுச் செயலாளராக களமிறங்கினார் டிடிவி தினகரன்.

பின்னர், டிடிவி ஆதிக்கம் செலுத்தவே முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி டிடிவியை கழட்டி விட்டு பன்னீரை ஆதரிக்க முடிவெடுத்தார். ஆனால் பன்னீர் இதுவரை இணைவதாக தெரியவில்லை.  

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டதற்கு பாஜக. தான் காரணம் என தெரிவித்தார்.

மேலும்  ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இணைக்க வேண்டும் எனவும், பாஜகவுக்கு எதிரான ஜனநாயகப் போரை ராகுல் காந்தி அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.