Asianet News TamilAsianet News Tamil

பிஜேபி.,க்கு பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்காம்.. குஷ்பு அடிக்கும் லூட்டி!

BJP is like Vadivelu in Thalainagaram building strong basement weak tweet khusbhu
BJP is like Vadivelu in Thalainagaram building strong basement weak tweet khusbhu
Author
First Published Oct 21, 2017, 1:15 PM IST

பாஜக.,வுக்கு "பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கு" என்று டிவிட்டரில் லூட்டி அடித்துள்ளார் காங்கிரஸில் தற்போதுள்ள நடிகை குஷ்பு.

நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் படம், பலவித சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

மெர்சல் படத்தில் இடம் பெற்ற சில வசனங்களுக்கு  பாஜக.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் சில திட்டங்கள் குறித்து தவறான தகவல்களை இந்தப் படம்  பொதுமக்களிடம் பதிவு செய்வதாகக் கூறிய பாஜக.,வினர், இந்த வசனங்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றுகோரி வருகின்றனர். டிஜிட்டல் இந்தியா திட்டம், இந்திய மருத்துவத் துறை, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை உள்ளிட்டவை குறித்து, இந்தியாவையும் சிங்கப்பூரையும் ஒப்பிட்டு வசனம் பேசியிருந்தார். ஆனால், சிங்கப்பூரின் உண்மை நிலவரம், அவர் படத்தில் பேசும் வசனத்துக்கு ஏற்ப இல்லை என்பதும்,  இந்தியாவை குறித்து அவர் சொல்லும் வசனமும் யதார்த்தத்தை மீறிய தகவல்கள் என்பதும் படக்குழுவினரையே இப்போது யோசிக்க வைத்துள்ளது.

இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற அந்த 4 வசனங்களை மட்டும் நீக்க வேண்டும் என்று, பாஜக., தரப்பில் இருந்து படக் குழுவிடம் பேசப்பட்டது. இதற்கு படத் தயாரிப்பாளர் தரப்பு ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியானது.  இந்நிலையில்,  இது தற்போது அரசியலாக்கப் பட்டுள்ளது. இத மீது கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு,  தலைநகரம் படத்தில் வடிவேல் காமெடி போல் உள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது முதலே, மெர்சல் படம் குறித்த விவாதங்கள், விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் களை கட்டியுள்ளன.  விஜய் ரசிகர்கள் மெர்சல் படத்தை வரவேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சினிமா துறையைச் சேர்ந்த பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வரும்போது, நடிகையும்,
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவும் தன் பங்குக்கு  டுவிட்டர் பக்கத்தில் பாஜக.,வை விமர்சித்துள்ளார்.

அந்தப் பதிவில், தலைநகரம் படத்தில் வடிவேலு ஒரு காமெடி சொல்வார். பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட்டு வீக்கு.. என்று! அந்த நிலையில்தான் தற்போது பாஜக உள்ளது. எதற்கெடுத்தாலும் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோருவதைப் பார்க்கும்போது பாஜக என்பது பாரதிய ஜனதா கட்சி அல்ல, எல்லாவற்றுக்கும் தடை கோரி டென்ஷனாகும் கட்சி என்றுதான் சொல்லவேண்டும் என்று   பதிவிட்டுள்ளார் குஷ்பு.

#BJP is like Vadivelu in #Thalainagaram. "building strong basement weak".d way dey r gng v shud say #BJP=BanningJitteryParty. #MersalVsModi
— khushbusundar (@khushsundar) October 20, 2017

Follow Us:
Download App:
• android
• ios