bjp is leading more than one hundred ten constituencies in karnataka

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் பாஜக வெற்றியை நெருங்கிவிட்டது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் ஆர்.கே.நகர் மற்றும் ஜெயாநகர் தொகுதிகளை தவிர மற்ற 222 தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 40 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவை 113 தொகுதிகள். காலை 10.15 மணி நிலவரப்படி, பாஜக 111 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 70 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 39 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. 

தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை எனவும் மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி அமைக்கும் கட்சியே ஆட்சியமைக்க முடியும் என்று கூறப்பட்டது. 

ஆனால் தற்போதைய சூழலில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முன்னிலையில் தொகுதிகளை கூட்டி கிடைப்பதைவிட, பாஜக 2 தொகுதிகளில் அதிகமாக முன்னிலையில் உள்ளது.

எனவே தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்க உள்ளது.