தமிழகத்தில் வேகமாக வளரும் பாஜக.. அண்ணாமலைய பார்த்து எல்லாரும் பயப்படுறாங்க.. சிலாகிக்கும் சி.டி.ரவி..!

திமுக, காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம் அவர்கள் குடும்பத்தை முன்னேற்றுவது மட்டும் தான். திமுக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் முழு நேர வேலையே ஊழல் செய்வது மட்டும்தான். ஆனால் எங்கள் வேலை மக்களுக்கானது என்று தெரிவித்தார்.

BJP is growing fast in Tamil Nadu... CT Ravi

தமிழகத்தில் பாஜக நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே  இருப்பதாகவும் மாநில தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டங்களை பார்த்து எதிர் கருத்துள்ள கட்சியினர் பயன்படுவதாகவும் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான் சி.டி‌.ரவி  திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.  அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலிமையுடன் முன்னேறி வருகிறது. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றது. அதற்கான ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்.

BJP is growing fast in Tamil Nadu... CT Ravi

திமுக, காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம் அவர்கள் குடும்பத்தை முன்னேற்றுவது மட்டும் தான். திமுக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் முழு நேர வேலையே ஊழல் செய்வது மட்டும்தான். ஆனால் எங்கள் வேலை மக்களுக்கானது என்று தெரிவித்தார்.

BJP is growing fast in Tamil Nadu... CT Ravi

பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின் கீழ் வேகமாக வளர்ந்து வருகிறோம். மக்கள் சேவை மட்டும்தான் எங்களது ஒரே நோக்கம். அண்ணாமலையை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர். அவரின் நடவடிக்கைகள், செயல் திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சியினர் அச்சத்தில் உள்ளனர் என சி.டி.ரவி கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios