திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்துவருகிறது.

இதில், திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்துடன் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செய்ய துடிக்கும் பாஜகவிற்கு தமிழகம் சிம்ம சொப்பனமாக திகழ்கிறது.

தமிழகத்தைப் போலவே திரிபுரா, நாகாலாந்து ஆகிய வட இந்திய மாநிலங்களிலும் இதுவரை பாஜகவிற்கு பெரிய பலம் வீடியோ கிடையாது. ஆனால், இந்த முறை அதை பாஜக மாற்றி எழுதியுள்ளது. 

நாட்டிலேயே எளிய முதல்வராக அறியப்படும் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் ஆட்சி திரிபுராவில் நடந்துவந்தது. இந்நிலையில், 60 தொகுதிகளை கொண்ட திரிபுராவில், பாஜக 40 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. மார்க்சிஸ்ட் கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. எனவே திரிபுராவில் பாஜகவின் ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடிவருகின்றனர். நாகாலாந்து மாநிலத்திலும் பாஜக தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 33 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.