தமிழகத்தில் உள்ள பிரபல ஜாதி கட்சி, இரண்டாக உடையும் தருணத்தில் உள்ளது என பாஜக அகில இந்திய இளைஞரணி துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.பி.முருகானந்தம் அவ்வபோது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். கடந்த வாரம் முக்கிய கட்சியில் இருந்து பி என்கிற எழுத்தில் ஆரம்பிக்கும் முக்கிய பிரமுகர் முன்னாள் அமைச்சர் ஒருவர் விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது அவர்வெளியிட்டுள்ள பகிர்வில் தமிழகத்தில் உள்ள பிரபல ஜாதி கட்சி உடையும் தருணத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் , பாஜக தலைவர்ஜி.கே.மணிக்கும் மன ஸ்தாபம். அதிமுக- பாஜக கூட்டணி வேண்டாம் என்று ஜி.கே.மணியும், அதிமுக-பஜக கூட்டணி வேண்டும்  என்று அன்புமணியும் காரசாரமாக விவாதித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தைலாபுரத்தில் பிரளயம் ஏற்பட்டு பாமக இரண்டாக உடையப்போவதாக கூறப்படுகிறது.  ஆனால், பாமக -பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் பாமகவை அவர் அப்படி கூறியிருப்பாரா என்கிற சந்தேகமும் எழுகிறது. சிலர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தான் உடையப்போவதாக ஏ.பி.முருகானந்தம் கூறியிருக்கிறார் என்கிறார்கள்.