Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகள்... ஹெச்.ராஜா, தமிழிசைக்கு இந்தத் தொகுதிகளா..?

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. 

BJP is contesting 5 seats in Tamil Nadu
Author
Tamil Nadu, First Published Mar 4, 2019, 5:35 PM IST

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. BJP is contesting 5 seats in Tamil Nadu

வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளன. இதக் கூட்டணியில் தேமுதிக இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூவமாக இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.  BJP is contesting 5 seats in Tamil Nadu

இந்நிலையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 இடங்களுக்கான உத்தேச தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென் சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் சிவகங்கை ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. BJP is contesting 5 seats in Tamil Nadu

சிவகங்கை தொகுதியில் எச்.ராஜாவும், தூத்துக்குடி தொகுதியில் தமிழிசையும், கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் தென் சென்னையில் இல.கணேசனும், கோவையில் சிபி.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுவார்கள் என தெரிகிறது. மதுரை, ராமநாதபுரம் தொகுதிகளும் பாஜகவின் சாய்ஸாக இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios