வன்னியர், கவுண்டர், நாடார், முக்குலத்தோர் உட்பட பிற சமூக குழந்தைகள் படிக்க கூடாது, தன்னுடைய அரசியலுக்கு 'அடியாள் வேலை மட்டுமே பார்' என்கிறது பாஜக அரசு என மே -17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். 

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது அதற்கு முன்னதாக 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் யாத்திரையை நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதியில் இருந்து டிசம்பர் 6ஆம் தேதி வரை 1 மாத காலம் வேல் யாத்திரை நடைபெற உள்ளது. இந்த வேல் யாத்திரையில் மத்திய அமைச்சர்கள், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், பாரதிய ஜனதா தேசியத் தலைவர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் இந்த வேல்யாத்திரைக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.  மே -17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நம் பிள்ளைகளின் டாக்டர் படிப்பை பறித்துவிட்டு, பாஜக வேல்யாத்திரை நடத்துகிறது. வன்னியர், கவுண்டர், நாடார், முக்குலத்தோர் உட்பட பிற சமூக குழந்தைகள் படிக்க கூடாது, தன்னுடைய அரசியலுக்கு 'அடியாள் வேலை மட்டுமே பார்' என்கிறது பாஜக. அரசே! கலவரத்தை விதைக்கும் யாத்திரையை தடுத்து நிறுத்துக’’எனக் கூறியுள்ளார்.