இடைத்தேர்தல் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதிமுகவை வலுவிழந்த கட்சியாகவே எண்ணி வருவது நிரூபணமாகி வருகிறது. இந்நிலையில் திருவாரூரில் ஜெயலலிதா பாணியைப் பின் பற்றி அதிமுகவை அலற வைத்திருக்கிறது பாஜக. 

மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக தனக்குக் கிடைக்கும் நம்பிக்கையான தகவல் அடிப்படையில் குறிப்பிட்ட தொகுதிக்கு அரசின் சலுகைகளை வாரி வழங்குவார். ஆனால், இப்போது ஜெயலலிதா இல்லாததால் மத்திய அரசு ஜெயலலிதா பாணியை பின்பற்றி ஸ்கோர் செய்துவிட்டது. வழக்கம்போல கோட்டை விட்டுவிட்டு அதிமுக திருதிருவென விழித்துக் கொண்டிருக்கிறது. காரணம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால் ஆளுங்கட்சி எதையும் இனி அறிவிக்க முடியாது.

அப்படி ஒரு சோதனையை பாஜக அதிமுகவுக்கு வைத்துள்ளது. திருவாரூரில் அதிமுகவின் செல்வாக்கை நிரூபித்தால் மட்டுமே எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு உதவுதாக முடிவிடுத்துள்ளது பாஜக. இல்லையேல் அதிமுகவின் நிலை அதோகதிதான் என்கிறார்கள். இதனால் கால அவகாசம் அளிக்காலம் குறுகிய நாட்களில் தேர்தலை தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்க வைத்து திக்குமுக்காட செய்திருக்கிறார்கள் என்கின்றனர். ஆக, இந்தத் தேர்தல் பாஜக டெல்லி தலைமை அதிமுகவுக்கு வைத்துள்ள அக்னி பரீட்சை என்கிறார்கள்.