Asianet News TamilAsianet News Tamil

அண்ணாமலை பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி பணம் வசூல்..! எச்சரிக்கை விடுத்த பாஜக

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரசிகர் மன்றம் பெயரில் பணம் வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பாஜக வழக்கறிஞர் அணி சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BJP has warned against starting a fan club in the name of Annamalai and collecting money
Author
First Published Apr 11, 2023, 10:53 AM IST

அண்ணாமலை பெயரில் பணம் வசூல்

பாஜக மாநில தலைவராக இருப்பவர் அண்ணாமலை, இவரது அதிரடி அரசியலுக்கு பாஜகவில் இளைஞர்கள் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதனையடுத்து சமூக வலைதளத்தில் அண்ணாமலை பேன் கிளப், அண்ணாமலை ஆர்மி என தொடங்கி அண்ணாமலையில் பேச்சுக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில் அண்ணாமலை ரசிகர் மன்றம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுவதாக தற்போது வெளியாகியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் உமாதேவி சார்பில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் பகுதியில் வசிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர்  உமாதேவி ஆகிய நான், கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், சத்தியமங்கலம் பகுதியில் வசிக்கும் வீரப்பன் மகன் குமரேசன் ஆகிய உங்களுக்கு கொடுக்கும் அறிவிப்பு யாதெனில்,

இபிஎஸ்- ஓபிஎஸ் மனு மீதான வழக்கில் இருந்து அதிரடியாக விலகிய நீதிபதி.! என்ன காரணம் தெரியுமா.?

BJP has warned against starting a fan club in the name of Annamalai and collecting money

எச்சரிக்கை விடுத்த பாஜக

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு K. அண்ணாமலை அவர்களின் பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி பெயரை தவறாக பயன்படுத்தி பணம் வசூல் செய்வதும் அதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் ரசிகர் மன்ற வளர்ச்சி நிதி என்ற பெயரில் வசூலும் செய்வதாக தெரிய வருகிறது. எனவே இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் திரு K. அண்ணாமலை அவர்களின் பெயரையும், கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் திரு V.V.செந்தில்நாதன் அவர்களின் பெயரையும் தவறுதலாக பயன்படுத்தி வசூல் எதுவும் மேற்கொள்ளக்கூடாது. என்று இந்த பொது அறிவிப்பின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

BJP has warned against starting a fan club in the name of Annamalai and collecting money

குற்றவியல் நடவடிக்கை

தவறும் பட்சத்தில் தங்கள் மீது சட்டப்படியான குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை தொடங்கப்படும் என்பதை இந்த பொது அறிவிப்பின் மூலம் அறியவும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபடுவதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் கரூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்

ஒரே நாளில் 5,676 பேருக்கு கொரோனா பாதிப்பு..! அச்சத்தில் பொதுமக்கள்- அதிர்ச்சியில் மத்திய அரசு

Follow Us:
Download App:
  • android
  • ios