மாநிலங்களவையில் மொத்த இடம் 245. இதில் 123 இடங்கள் மெஜாரிட்டிக்குத் தேவை. தற்போதைய நிலையில் 22 இடங்கள் பாஜகவுக்குத் தேவை. இன்னும் அடுத்த ஓராண்டு காலத்தில் மாநிலங்களவையில் பல இடங்கள் காலியாக இருப்பதால் இந்த இடங்களை பாஜக கூட்டணி பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மாநிலங்களையில் மெஜாரிட்டியை வேகமாக நெருங்கிவருகிறது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.


 மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) காலியான 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 இடங்களுக்கான தேர்தல் மார்ச் 29 அன்று நடைபெறுவதாக இருந்தது. 36 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், எஞ்சியவரளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மார்ச் 25-ம் தேதி நள்ளிரவு முதல் கொரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 19 இடங்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது.