Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்ட்ராங் சிக்னல் கொடுத்த பாஜக... பை-பாஸில் வேகமெடுக்கும் அதிமுக..!

சசிகலா வெளியே வந்தால் பணபலம் , சாதி பலத்தை காட்டி தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தலாம் என்பதால் அவருக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை பினாமி சட்டத்தின் கீழ் முடக்கி இருக்கிறது மத்திய அரசின் கீழ் இயங்கும் வருமான வரித்துறை.
 

BJP gives strong signal to Edappadi Palanisamy ... AIADMK speeds up by-pass
Author
Tamil Nadu, First Published Oct 7, 2020, 5:22 PM IST

சசிகலா வெளியே வந்தால் பணபலம் , சாதி பலத்தை காட்டி தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தலாம் என்பதால் அவருக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை பினாமி சட்டத்தின் கீழ் முடக்கி இருக்கிறது மத்திய அரசின் கீழ் இயங்கும் வருமான வரித்துறை.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, சசிகலாவுக்கு சொந்தமான இடம் என பல இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் 187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தது.  ஒரு வாரத்திற்கு மேல் நீடித்த இந்த சோதனையில் கணக்கில் வராத பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள், வங்கி கணக்குகள், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாங்கி குவிக்கப்பட்ட அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.  சுமார் ரூ.4,500 கோடிக்கு சொத்துகள் கண்டறியப்பட்டது. மொத்தம் ரூ.1600 கோடி மதிப்பில் சொத்துகளை பினாமி பெயரில் வாங்கி குவித்தது தெரியவந்தது. இதனையடுத்து வருமானவரித்துறை அந்த சொத்துகளை முடக்கியது.BJP gives strong signal to Edappadi Palanisamy ... AIADMK speeds up by-pass

இந்நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்பேட்ட உள்ளிட்ட சொத்துக்கள்  முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சசிகலாவில் 1,600 கோடி சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. இதுவரை சசிகலாவின் 65 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 3-ம் தேதி பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், சசிகலா பினாமி  பெயர்களில் வாங்கி குவித்துள்ள ரூ.300 கோடி மதிப்பு, 200 ஏக்கர் 65 சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது.

 BJP gives strong signal to Edappadi Palanisamy ... AIADMK speeds up by-pass

இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் சசிகலா ரிலீசாக இருப்பதாகவும், அதற்காக பாஜக உதவியை டி.டி.வி.தினகரன் நாடுவதாகவும், அதிமுகவுக்கு சசிகலா பொதுச்செயலாளர் ஆகலாம் என்றும் கூறப்பட்டது. இதற்காக தனி விமானத்தில்  சில தினங்களுக்கு முன் டெல்லி சென்ற டி.டி.வி.தினகரன் பாஜக முக்கியத்தலைவர்களை சென்று சந்தித்ததாகவும் தகவல் வெளியாயின. BJP gives strong signal to Edappadi Palanisamy ... AIADMK speeds up by-pass

ஆனால், சசிகலாவுக்கு அதிமுகவில் எப்போதும் இடமில்லை என்பதை உணர்த்தவே அவரது 2000 கோடி சொத்துக்களை பாஜக தயவில் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் ஓ.பி.எஸ்- எடப்பாடி விவகாரம் முடிவுக்கு வந்து எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றே பாஜக தலைமை சசிகலா தரப்பிற்கு அதிர்ச்சிவைத்தியம் கொடுத்துள்ளது. இதனால், இனி அதிமுகவில் சசிகலா என்கிற பேச்சுக்கே இடமில்லை என்பது நிரூபனமாகி இருக்கிறது. அனைத்து விவகாரங்களும் முடிந்து இனி அதிமுக சட்டமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ள பைபாஸ் வேகத்தில் பணிகளை தொடங்கும் எனக்கூற்ப்படுகிறது.   

Follow Us:
Download App:
  • android
  • ios