திமுக ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளை..பேச தயாரா? அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்
‘30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பிரச்சனை இல்லாத ஊரில் புதிய பிரச்சினைகள் எல்லாம் எழுப்பி இப்போது பூதாகரமாக கொண்டு வரக்கூடிய நிலை உள்ளது’ என்று கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் ஆதாயத்திற்காக மதரீதியான பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அமைதி நாடி அனைத்து மக்களும் இருக்கும்போது மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற முனைப்போடு சிலர் செயல்பட தொடங்கி இருக்கிறார்கள்.
30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பிரச்சனை இல்லாத ஊரில் புதிய பிரச்சினைகள் எல்லாம் எழுப்பி இப்போது பூதாகரமாக கொண்டு வரக்கூடிய நிலை உள்ளது. இது மிகவும் துரதிஷ்ட வசமானது. மாவட்ட ஆட்சியாளரும், காவல்துறை கண்காணிப்பாளரும் ஒரு அழுத்தங்கள் காரணமாக நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள். அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும் போது எனக்கு சவால் விட்டு உள்ளார். எங்கு வேண்டுமானாலும் வாருங்கள். விவாதத்திற்கு வாருங்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க..‘முதலில் எருமை, அடுத்து மாடு.. இப்போ அதுவும் போச்சா.! அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் ரயில்’
நான் அதற்கு தயாராக உள்ளேன். மனோ தங்கராஜ் அவர் சார்ந்துள்ள கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவரது செயல் பாடுகள் அந்த நம்பிக்கையை தரவில்லை. மாவட்டத்திலிருந்து குவாரிகள் மூலமாக வெளிமா நிலங்களுக்கு கற்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் ஆணை பிறப்பிக்க வேண்டியது அமைச்சர்தான். அவர், கோரிக்கை வைக்கக் கூடாது. ஆனால் மாவட்ட கலெக்டரிடம் அவர் மனு கொடுக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 51 டவுன் பஞ்சாயத்துகளுக்கும் ஒவ்வொரு டவுன் பஞ்சாயத்துக்கும் ஏறக்குறைய 52 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் நிதி இந்த ரூபாயில் 15 சதவீதம் தனியாக தனக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத ஆணை எல்லா பஞ்சாயத்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைவிட தலைகுனிவு வேறு ஏதும் உண்டா ? குமரி மாவட்டத்தில் இருந்த சூழ்நிலைகளை எல்லாம் தமிழக முதல்-அமைச்சர் நேரடி பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி தலைமையில் 11-ந்தேதியிலிருந்து 15-ந் தேதிக்குள் நேரம் கொடுக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் சேர்ந்து சந்திக்க உள்ளோம். குமரியில் மண் இல்லை, ஜல்லி இல்லை. கேரளாவிற்கு கனிமவளங்கள் செல்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ? திமுக ஆட்சி காலத்தில் கனிம வளங்கள் கேரளா செல்லவில்லை என்று கூறுங்கள்.
இதையும் படிங்க..திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !
நாங்கள் பாராட்டுகிறோம். 4 வழி சாலை பணிகள் தாமதத்திற்கு திமுக அரசே காரணம். ஜல்லி, மண், தண்ணீர் கொடுக்கா விட்டால் எப்படி பணிகள் நடைபெறும். உங்களால் முடியவில்லை என்றால் கூறுங்கள். மத்திய மந்திரி நிதின் கட்கரி கடந்த 26-ந்தேதி எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 4 வழிசாலை பணிகளை விரைவாக தொடங்கி முடிப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, வி.கே சிங் ஆகியோரை சந்தித்து பேசினேன். மாவட்டத்தின் வளர்ச்சி பற்றி அமைச்சர் மனோ தங்கராஜ் கவலைப்படவில்லை. திமுக தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பேசினார்.
இதையும் படிங்க..‘ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவிய முக்கிய விக்கெட்.. அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு !’