கோவையில் பெரியார் சிலைக்கு காவி பூசப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்டுத்தியது.அடுத்ததாக திருவள்ளுவர் பாண்டிச்சேரியில் எம்ஜிஆர் கன்னியாகுமரியில் பேரறிஞர் அண்ணாசிலை என அனைத்துக்கும் காவி துணிகள் அணியப்பட்ட விவகாரம் திராவிடக்கட்சிகளிடையே சலசலப்பையும் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்து அளவிற்கு சென்றது.

கறுப்பர் கூட்ட கந்த சஷ்டி அவமதிப்பு விவகாரம் தமிழகத்தில் திமுகவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. திமுக தலைவர் ஸ்டாலின்.. ' எங்கள் இயக்கத்தில் 1கோடி இந்துகள் இருப்பதாகவும் நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்று முழுங்கினார். இந்த பிரச்சனை இன்னும் முடிந்த பாடில்லை. பாஜக மாநில தலைவர் முருகன் இந்துக்கள் வீடுகளிள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" முழுக்கம் எழுப்பி விளக்கு ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். நாளை இந்துக்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற காத்திருக்கிறார்கள். பாஜகவின் அரசியல் தமிழகத்தில் ஏதாவது ஒரு வகையில் அனைவரது வீடுகளில் புகுந்து வருகின்றது.


கோவையைச் சேர்ந்த அருண் பெரியார் சிலைக்கு காவி பூசிய வழக்கில் சரண்டர் ஆனார். இதை ஊக்குவிக்கும் விதமாக அவரது குடும்பத்திற்கு பாஜக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக 50ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.இந்த தகவலை இந்த அணியின் தலைவர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.