பிஜேபி- மோடியை மக்கள் இன்னும் கல்லால் அடிக்காமல் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி ஜோதிமணி பேசியதற்கு பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன் மூன்றாம் தர பெண் என விமர்சித்தது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியை கல்லால் அடிப்பதாக ஜோதிமணி விமர்சித்ததால் தான் கரு. நாகராஜன் அப்படி பேசவேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டதாக பாஜகவை சேந்த நிர்வாகிகள் கரு.நாகராஜனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஏ.பி.நாகராஜன், '’தரம் கெட்ட பேச்சால் விவாதத்திலிருந்து வெளியேறினேன் - ஜோதிமணி. தரம், தராதரம் எதுவுமே..உங்கள் கட்சிக்கும், உங்கள் கூட்டணி கட்சிக்கும் எள்ளளவு கூட இல்லை. தினை விதைத்தவன் தினையறுப்பான், வினை விதைத்தவன் வினையறுப்பான். இதுக்கே மெர்சல் ஆனா எப்படி? இத்தாலி அடிமைகள் தரத்தை பற்றி பேசுவதும், முரசொலி முட்டாள்கள் ஆபாசத்தை பற்றி பேசுவதும், ஓசி சோறுகள் கண்ணியத்தை பற்றி பேசுவதும்.. கொரோனாவை விட கொடுமை’’எனத் தெரிவித்துள்ளார். 

கே.டி.ராகவன் இதுகுறித்து, ‘’ஜோதிமணி என்ற பெண்ணுக்காக பரிந்து பேசும் நல்ல உள்ளங்கள் ஒருத்தராவது தமிழிசையை உருவ கேலி பண்ணும் போது ஏனு கேட்டாங்களா ?? வன்முறை அரசியலை நோக்கி சமூகத்தை நகர்த்துகிறது திமுக. பிரதமர் நரேந்திர மோடியை கல்லால் அடிக்க வேண்டும் என்று பாராளுமன்ற திமுக எம்பி ஜோதிமணி பேசியது வன்முறையை தூண்டும் அரசியல். எம்.பி யாக இருந்து கொண்டு பிரதமர் மீது வன்முறையை தூண்டியது மூன்றாம் தர பெண்ணின் பேச்சு தான்’’எனத் தெரிவித்துள்ளார். 

பிரதமரை கல்லால் அடிப்போம் என்று சொல்வது எந்தவூர் நாகரீகம் ஜோதிமணி அவர்களே? பாராளுமன்ற உறுப்பினர் என்றால் நீங்கள் வன்முறையை தூண்டுவீர்களோ? இதுல உங்களுக்கு  பெண்களையும் பட்டியலின சமுதாயத்தினரையும் இழிவு படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ள திமுகவின் கனிமொழி வேறு வக்காலத்து..’’பாஜகவை சேர்ந்த பலடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.