அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மேனாக உள்ள பாஜக நிர்வாகி ஒருவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அடுத்த தெள்ளிமேடுவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லிங்கேசன் (52) என்பவர், காவலாளியாக பணியாற்றுகிறார். மேலும் இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பாஜக விவசாய அணி நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் லின்கேசன் குடியிருப்பில் உள்ள சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுப்பட்டு வந்துள்ளார். சிறுமிகள் யாரும் இதனை வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய லின்கேசன் அடிக்கடி இது போன்ற சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளார்.

இதே போல் நேற்று முன்தினம் சிறுமி ஒருவருக்கு லிங்கேசன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அடுக்குமாடி குடிபிருப்பில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விரைவாக வந்து சிறுமியை மீட்ட அவர்கள் லின்கேசனை அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவுசெய்த போலீசார் போக்சோ சட்டத்தில் லின்கேசனை கைது செய்துள்ளனர். ஒரு பாஜக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.